Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | பாலிலா இனப்பெருக்கம்

தாவரங்களில் இனப்பெருக்கம் - பாலிலா இனப்பெருக்கம் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

பாலிலா இனப்பெருக்கம்

பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது. பாலிலா இனப் பெருக்கத்தின் போது பூஞ்சை இழையிலிருந்து ஒரு வித்தகம் (ஸ்போராஞ்சியம்) தோன்றுகிறது.

பாலிலா இனப்பெருக்கம்

பாலின செல்கள் இணைவின்றி ஒரே ஒரு தாய்த் தாவரத்திலிருந்து புதிய தாவரம் தோன்றும் முறையைப் பாலிலா இனப்பெருக்கம் என்கிறோம். இந்த வகை இனப்பெருக்கத்தில் குன்றாப் பகுப்பு செல் பிரிதல் மட்டுமே நடைபெறுகிறது. குன்றல் பகுப்பு நடைபெறுவதில்லை. எனவே பாலிலா இனப்பெருக்க முறையில் தோன்றும் இளம் உயிரிகள் தாய்த் தாவரத்தை ஒத்துக் காணப்படுகின்றன. பாலிலா இனப்பெருக்கம் விதைத்துகள்கள் (Spores) மூலம் நடைபெறுகிறது.

பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது. பாலிலா இனப் பெருக்கத்தின் போது பூஞ்சை இழையிலிருந்து ஒரு வித்தகம் (ஸ்போராஞ்சியம்) தோன்றுகிறது. இதனுள் இருக்கும் உட்கரு பலமுறை பிரிதல் அடைந்து ஏராளமான உட்கருக்களைத் தோற்றுவிக்கிறது. ஒவ்வொரு உட்கருவும் சிறிதளவு சைட்டோபிளாசத்துடன் சேர்ந்து ஸ்போராக (விதைத்துக்கள்) உருவாகிறது. வித்தகம் என்னும் ஸ்போராஞ்சியம் வெடித்து விதைத்துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவை நிலத்தில் விழும்போது புதிய உடல இழையைத் (ஹைபா) தோற்றுவிக்கின்றன.


செயல்பாடு 1

ஈரப்படுத்திய ரொட்டித் துண்டை ஈரமான இருளான இடத்தில் வைக்கவும்.

ஓரிரு நாட்களில் உருப்பெருக்கும் கண்ணாடியில் அதை உற்று நோக்கவும்.

அதில் ஏற்படும் மாற்றத்தினைக் குறிப்பெடுக்கவும்.

 

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்