Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | தாவரங்களில் கருவுறுதல்

முக்கியத்துவம் | தாவரங்களில் இனப்பெருக்கம் - தாவரங்களில் கருவுறுதல் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

தாவரங்களில் கருவுறுதல்

மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. அதற்கு மகரந்தக் குழாய் என்று பெயர். இது மகரந்தத் தூளில் உள்ள மகரந்தத் துளை வழியாக வெளிவருகிறது. மகரந்தத் தூளின் உள்ளிருக்கும் பொருள்கள் மகரந்தக் குழாய்க்குள் நகர்கின்றன.

தாவரங்களில் கருவுறுதல்


· மகரந்தத்தூள், பொருத்தமான சூலகமுடியை அடைந்ததும் முளைக்கத் தொடங்கும்.

· மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. அதற்கு மகரந்தக் குழாய் என்று பெயர். இது மகரந்தத் தூளில் உள்ள மகரந்தத் துளை வழியாக வெளிவருகிறது. மகரந்தத் தூளின் உள்ளிருக்கும் பொருள்கள் மகரந்தக் குழாய்க்குள் நகர்கின்றன.

· மகரந்தக் குழாய் சூலகமுடி மற்றும் சூலகதண்டில் உள்ள திசுக்கள் வழியாக வளர்ந்து இறுதியில் சூலகத்தில் உள்ள சூல் துளையை அடைகிறது.

· உடல் செல்லானது அழிந்து விடுகிறது. உற்பத்தி செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை (விந்தணு) உருவாக்குகிறது.

· மகரந்தக் குழாயின் முனை வெடித்து இரண்டு ஆண் இனச்செல்லும் சூல்பையை அடைகின்றது.

· ஓர் ஆண் இனச்செல் (விந்தணு) அண்டத்துடன் இணைந்து (சின்கேமி) இரட்டைமய சைகோட்டைத் தோற்றுவிக்கிறது. மற்றோர் ஆணின செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மைக் கருவூண் உட்கருவைத் தோற்றுவிக்கிறது. இது மும்மய உட்கரு ஆகும். இங்கு இரண்டு இணைவுகள் - (i) சின்கேமி (ii) மூவிணைவு நடைபெறுவதால் இது இரட்டைக் கருவுறுதல் எனப்படுகிறது.

· மூவிணைவுக்குப் பின்னர் முதன்மைக் கருவூண் உட்கரு, கருவூணாக மாறுகிறது.

· கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.

· சினையாற்றியம் (சினர்ஜிட்) மற்றும் பக்கவாட்டு செல்கள் அழிந்து விடுகின்றன.

 

கருவுறுதலின் முக்கியத்துவம்

· சூற்பையைத் தூண்டி, கனியை உருவாக்குகிறது.

· புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.

 

கருவுறுதலுக்குப் பின் நடைபெறும் நிகழ்வுகள்

· சூலானது விதையாக மாறுகிறது.

· சூலுறை, விதையுறையாக மாற்றம் அடைகிறது.

· சூல் பை பெரியதாகி, கனியாக மாறுகிறது.

விதையானது வருங்காலத் தாவரத்தை உள்ளடக்கியுள்ளது. பின்பு இது தகுந்த சூழ்நிலையை அடையும் போது தாவரமாக வளர்கிறது.

 

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்