Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

 

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்

அ. ஃபேபேஸி

ஆ. ஆஸ்ட்ரேஸி

இ. சொலனேசி

ஈ. பிராஸிக்கேசி

 

2. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலக வட்டம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

அ. இணையாச் சூலக இலை சூலகம்

ஆ. பல சூலக இலை சூலகம்

இ. இணைந்த சூலக இலை சூலகம்

ஈ. மேற்கூறிய எதுவுமில்லை

 

3. திரள் கனி இதிலிருந்து உருவாகிறது.?

அ. பல இணையாச் சூலக இலை சூலகப்பை

ஆ. பல இணைந்த சூலக இலை சூலகப்பை

இ. பல சூலக இலை சூலகப்பை

ஈ. முழு மஞ்சரி

 

4. ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு

அ. அண்மையிலிருக்கும்

ஆ. சேய்மையிலிருக்கும்

இ. இடைச்செருக்கப்பட்டிருக்கும்

ஈ. எங்கும் இருக்கும்

 

5. உண்மைக் கனி என்பது?

அ. மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது

ஆ. மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது

இ. மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது

ஈ. மலரின் அனைத்து வட்டங்களுக்கும் கனியாக உருவாவது


11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்