Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில்

தாவரவியல் - மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில்

தோன்றுமிடத்தின் அடிப்படையில் மஞ்சரியை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.

மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில்

மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது? தண்டு நுனியிலா அல்லது இலைக் கக்கத்திலா?

தோன்றுமிடத்தின் அடிப்படையில் மஞ்சரியை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம். அவை,

நுனிமஞ்சரி: தண்டு நுனியிலிருந்து வளர்ந்து உருவாவது. எடுத்துக்காட்டு: நீரியம் ஒலியாண்டர்.

கக்கமஞ்சரி: இலையின் கக்கத்தில் தோன்றுவது. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ் ரோசா- சைனஸ்சிஸ்.

தண்டுமஞ்சரி (காலிஃபுளோரஸ்) : மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து நேரடியாக மஞ்சரி உருவாதல். எடுத்துக்காட்டு: தியோபுரோமா கொக்கோ, கௌரோபிட்டா கைனென்சிஸ்.

பலா மற்றும் நாகலிங்க மரத்தின் மஞ்சரிகளைக் கவனி. அவை எங்கிருந்து உருவாகின்றன?

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்