Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

சுவாசம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 6 : Respiration

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது

அ) பெருமூளை

ஆ) முகுளம்

இ) சிறுமூளை

ஈ) பான்ஸ்

விடை: ஆ) முகுளம்


2. எலும்பிடைத் தசைகள் இதனிடையே அமைந்துள்ளன

அ) முதுகெலும்புத் தொடர்

ஆ) மார்பெலும்பு

இ) விலா எலும்புகள்

ஈ) குரல்வளைத் துளை

விடை: இ) விலா எலும்புகள்


3. பூச்சிகளின் சுவாச உறுப்புகள்

அ) மூச்சுக்குழல்கள்

ஆ) செவுள்கள்

இ) பச்சை சுரப்பிகள்

ஈ) நுரையீரல்கள்

விடை: அ) மூச்சுக்குழல்கள்


4. ஆஸ்துமா ஏற்படக் காரணம்

அ) புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

ஆ) மூச்சுக்கிளை குழல் மற்றும் நுண் குழலில் வீக்கம்

இ) உதரவிதானச் சேதம்

ஈ) நுரையீரல் தொற்று

விடை: அ) புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு


5. ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது

அ) சிக்மாய்டு

ஆ) நேர்க்கோடு

இ) வளைந்தது

ஈ) நீள்சதுர மிகை வளைவு

விடை: அ) சிக்மாய்டு


6. ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு

அ) 800 மிலி 

ஆ) 1200மிலி

இ) 500 மிலி 

ஈ) 1100-1200மிலி

விடை: இ) 500 மிலி 


7. உட்சுவாசத்தின் போது உதரவிதானம் 

அ) விரிவடைகிறது

ஆ) எந்த மாற்றமும் இல்லை

இ) தளர்ந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது

ஈ) சுருங்கித் தட்டையாகிறது

விடை: ஈ) சுருங்கித் தட்டையாகிறது


8. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை

அ) கார்பானிக் அமிலம்

ஆ) ஆக்சிஹீமோகுளோபின்

இ) கார்பமினோஹீமோகுளோபின்

ஈ) கார்பாக்சி ஹீமோகுளோபின்

விடை: இ) கார்பமினோஹீமோகுளோபின்



9. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை

அ) உயிர்ப்புத்திறன்

ஆ) மூச்சுக்காற்று அளவு

இ) எஞ்சிய கொள்ளளவு

ஈ) உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு

விடை: அ) உயிர்ப்புத்திறன்


10. உயிர்ப்புத் திறன் என்பது

அ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாசசேமிப்புக் கொள்ளளவு

ஆ) மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

இ) எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு

ஈ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு.

விடை: ஈ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு.


11. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

அ) இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

ஆ) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

இ) இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

ஈ) இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்

விடை: ஆ) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 


12. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.

அ) கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்று நோய் காரணிகள்

ஆ) கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின் 

இ) புற்று நோய் காரணிகள் மற்றும் தார் 

ஈ) நிக்கோடின் மற்றும் தார்

விடை: இ) புற்று நோய் காரணிகள் மற்றும் தார் 


13. பத்தி I இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.

பத்தி- I பத்தி-II

P) ஆஸ்துமா i) அடிக்கடி உருவாகும் மார்பு சளி

Q) எம்ஃபைசீமா ii) காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழுமுதல்

R) நிமோனியா iii) ஒவ்வாமை


விடை: அ


14. கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?

அ) சுவாசத்தின் போது காற்று நுண்ணறைக்குள் வாயு நுழைவதும் வெளியேறுவதும் நடைபெறுகிறது.

ஆ) இரத்த நுண் நாளங்களிலிருந்து கார்பன் டைஆக்ஸைடு காற்று நுண்ணறையில் உள்ள காற்றில் விரவிச் செல்கிறது.

இ) இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்ஸைடு விரவிச் செல்கிறது.

ஈ) காற்று நுண்ணறைகளிலிருந்து ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனற்ற இரத்தத்திற்குள் விரவிச் செல்கிறது.

விடை: இ) இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்ஸைடு விரவிச் செல்கிறது.


15. சரியான இணையைத் தேர்ந்தெடு

பத்தி-I  பத்தி-II

(P) உட்சுவாசத்திறன் - i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு

(Q) வெளிச்சுவாசத்திறன்- ii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு

(R) உயிர்ப்புத்திறன் அல்லது .முக்கியத்திறன் iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும் காற்றின் கொள்ளளவு

(s) செயல்பாட்டு சுவாசத் திறன் - iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியே ற்றப்படும் காற்றின் கொள்ளளவு.


விடை: ஈ)


16. சரியான இணையைப் பொருத்துக.

பகுதி – I  பகுதி - II

P மூச்சுக் காற்று அளவு i . 1000 முதல் 1100 மி.லி. வரை

Q எஞ்சிய கொள்ளளவு ii. 500 மி.லி.

R வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு iii. 2500 முதல் 3000 மி.லி.வரை

S உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு iv.   1100 முதல் 1200 மி.லி.வரை


விடை: அ)


11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்