Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள் விடைகள்

பருப்பொருளின் பண்புகள் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 7 : Properties of Matter

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

கருத்துரு வினாக்கள் விடைகள்

இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எண்ணியல் கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : கருத்துரு வினாக்கள் விடைகள்

பருப்பொருளின் பண்புகள் 

கருத்துரு வினாக்கள்


1. ஒரு சர்க்கரைக் கட்டியின் ஒரு முனை காப்பியில் வைக்கப்பட்டால் சர்க்கரைக் கட்டியினுள் காப்பி மேலேறுகிறது ஏன்? 

விடை: 

நுண்புழை நுழைவின் காரணமாக சர்க்கரை கட்டியில் காப்பி மேலேறுகிறது. 


2. எண்ணெய் கொள்கலனை (tin) காலி செய்ய இருதுளைகள் ஏன் இடப்படுகிறது? 

விடை:

ஒரு துளையின் வழியே எண்ணெய் வெளிவரும் போது கொள்கலனுக்குள் (tin) அழுத்தம், வளிமண்டல அழுத்தத்தை விட குறையும். எனவே எண்ணெய் வெளிவருவது நின்றுவிடும். எனவே இரு துளை இடும்போது மற்றொரு துளை வழியே காற்று கொள்கலனினுள் நுழைந்து அழுத்தத்தை சமன் செய்யும்.


3. மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம் ஏன்?

விடை: 

மழுங்கிய கத்தியை விட கூரான கத்தியின் முனையில் பரப்பு குறைவு. எனவே ஓரலகு பரப்பிற்கான விசை கூரிய கத்திக்கு அதிகம். எனவே கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம்.


4. விமானத்தில் செல்லும் பயணிகள் மேலேறும் போது தங்கள் பேனாவில் உள்ள மையை கொட்டி விடுமாறு ஏன் அறிவுறுத்தப் படுகிறார்கள்? 

விடை:

• உயரம் அதிகரிப்பதால் விமானத்தில் வளிமண்டல அழுத்தம் குறையும். 

• பேனாவில் மையானது வளிமண்டல அழுத்தத்தில் நிரப்பப் பட்டிருக்கும். 

• விமானத்தில் அழுத்தம் குறைவதால் அதை சமன் செய்ய மையானது பேனாவிலிருந்து வெளியேறிவிடும். 

• எனவே விமானத்தில் ஏறும்போது தங்கள் பேனாவில் உள்ள மையை கொட்டிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


5. மென் பானங்களைக் குடிப்பதற்கு நாம் உறிஞ்சு குழாயைப் பயன்படுத்துகிறோம் ஏன்?

விடை:

• மென் பானங்களில் உறிஞ்சு குழாயை வைக்கும் போது நுண்புழை ஏற்றம் காரணமாக மேலே ஏறும். 

• மேலும் உறிஞ்சு குழாயை உறிஞ்சும் போது வளிமண்டல அழுத்தத்தை விட உறிஞ்சு குழாயில் அழுத்தம் குறையும். எனவே மேலே ஏறும். நாம் எளிதில் குடிக்கலாம்.


11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்