Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | ஒரு கோடு ஒரு தளத்தின் மீது அமைவதற்கான கட்டுப்பாடு (Condition for a line to lie in a plane)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 6 : வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்

ஒரு கோடு ஒரு தளத்தின் மீது அமைவதற்கான கட்டுப்பாடு (Condition for a line to lie in a plane)

கொடுக்கப்பட்ட ஒரு கோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியும், தளத்தின் மீது இருக்கும் எனவும், தளத்தின் செங்கோடு கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டிற்கு செங்குத்தாக அமையும் எனவும் இருப்பின், அந்நேர்க்கோடு தளத்தின் மீது அமையும்.

7. ஒரு கோடு ஒரு தளத்தின் மீது அமைவதற்கான கட்டுப்பாடு (Condition for a line to lie in a plane)

கொடுக்கப்பட்ட ஒரு கோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியும், தளத்தின் மீது இருக்கும் எனவும், தளத்தின் செங்கோடு கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டிற்கு செங்குத்தாக அமையும் எனவும் இருப்பின், அந்நேர்க்கோடு தளத்தின் மீது அமையும். அதாவது,


(ii)   என்ற கோடு Ax + By + Cz + D = 0 என்ற தளத்தின் மீது இருந்தால், Ax1 + By1 + Cz1 + D = 0 மற்றும் aA + bB + cC = 0 ஆகும்.


எடுத்துக்காட்டு 6.45

என்ற கோடு 5x−y+z=8 என்ற தளத்தில் அமையுமா எனச்சரிபார்க்க.

தீர்வு 

இங்கு, (x1,y1,z1) = (3,4,−3) மற்றும் கோட்டின் திசை விகிதங்கள் (a,b,c) = (−4,−7,12) ஆகும். தளத்தின் செங்கோட்டின் திசை விகிதங்கள் (A,B,C) = (5,−1,1) ஆகும்.

கொடுக்கப்பட்ட புள்ளி (x1,y1,z1) = (3,4,−3) ஆனது 5x−y+z=8 என்ற தளத்தை நிறைவு செய்வதைக் காண்கிறோம். ஆனால், aA + bB + cC = (−4)(5) + (−7)( −1) + (12)(1) = −1 ≠  0 என்பதால் தளத்தின் செங்கோடு கொடுக்கப்பட்ட கோட்டிற்கு செங்குத்தானது அல்ல. எனவே, கொடுக்கப்பட்ட கோடானது கொடுக்கப்பட்ட தளத்தின் மீது அமையாது.

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 6 : வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்