Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

ஒரு தரவுத்தளம் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.

அலகு V

பாடம் 15

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்த பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள், பைத்தான் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி,

• ஒரு தரவு அட்டவணையை உருவாக்கி அதில் புதிய வரிசைகளைத் தரவுத் தளத்தில் சேர்த்தல்.

• ஒரு தரவு அட்டவணையில் உள்ள பதிவுகளை மேம்படுத்துதல் மற்றும் நீக்குதல்.

• ஒரு தரவு அட்டவணையில் வினவல்.

• CSV கோப்பில் வினவலை எழுதுதல்.


அறிமுகம்   

ஒரு தரவுத்தளம் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். “தரவுத்தளம்” என்ற கூறு தரவுகளை அல்லது தரவுத்தள மேலாண்மை அமைப்பைக் குறிக்கும். பயனர்கள் மற்றும் தரவுத்தளத்திற்கு இடையே உள்ள தொடர்புக்கு பயன்படும் மென்பொருள் பயன்பாடே தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும். பயனர்கள் மனிதர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பிற நிரல்களாகவோ அல்லது பயன்பாடுகளாகவோ இருக்கலாம். பைத்தான் நிரல் எவ்வாறு SQL தரவுத்தளத்துடன் பயனராக தொடர்பு கொள்கிறது என்பதை இனி கற்கலாம்.


12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்