Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | வரையறை, முக்கிய தனியார் நிறுவனங்கள்

அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வரையறை, முக்கிய தனியார் நிறுவனங்கள் | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்

வரையறை, முக்கிய தனியார் நிறுவனங்கள்

தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது. தனியார் துறை நிறுவனங்கள் தனியார் அல்லது பொது வர்த்தக நிறுவனங்களின் அளவுகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

தனியார் துறையின் வரையறை

தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது. தனியார் துறை நிறுவனங்கள் தனியார் அல்லது பொது வர்த்தக நிறுவனங்களின் அளவுகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. அவை இரண்டு வழிகளில் உருவாக்கப்படுகிறது அதாவது ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதன் மூலமாகவோ அல்லது எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலமாகவோ உருவாகிறது.

தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும். இது அரசாங்கத்தை விட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. பொதுத்துறை பரந்து விரிந்து இருந்தாலும் கூட, தனியார் துறையின் பங்களிப்பு தொடர்ந்து மிகப்பெரியதாக இருக்கிறது. இது நடுத்தர, சிறிய மற்றும் மிகச்சிறிய அல்லது நுண்ணிய அளவிலான தொழில் வளர்ச்சியால் ஏற்பட்டது.

மேலும் குடிசை மற்றும் கிராமத் தொழில்கள் மற்றும் சிறிய அளவு தொழில்களின் உற்பத்தியின் பங்களிப்பு மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தின் முக்கிய பகுதி ஆகும். தேசிய உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பு பொதுத் துறையை விட அதிகமாக உள்ளது சாலை, கப்பல் மற்றும் விமான வழி போக்குவரத்து மற்றும் நுகர்வோர் தொழில்களிலும் தனியார் துறை ஆதிக்கம் செலுத்துகிறது.


முக்கிய தனியார் நிறுவனங்கள்

• இன்போசிஸ் நிறுவனம்

• ஆதித்யா பிர்லா நிறுவனம்

• ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்கள்

• டாட்டா குழும நிறுவனங்கள்

• விப்ரோ நிறுவனம்

• இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்

• ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்



தனியார் துறையின் பணிகள்

•தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்தோடு இயங்க கண்டறிவதற்கும், உற்பத்தியின் புதியநுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களை தூண்டுகிறது.

•உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

•இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல், விரிவுபடுத்துதல்.

•மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்குக் குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல் மற்றும் சமூக வணிக மற்றும் கூட்டுறவு, உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்.

•சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMME) வழங்குவதன் மூலம் அளிப்பு பக்க நடவடிக்கைகள் மற்றும் தேவை பக்க நடவடிக்கைகளைக் கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்.

இந்தியா ஒரு கலப்பு பொருளாதார நாடாக இருப்பதால், விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாட்டில் உள்ள தனியார் துறைக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்தியாவின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் துறையான வேளாண்மை மற்றும் பால் பண்ணை தொழில், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பிற தொடர்புடைய நடவடிக்கைகள் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு முழு வேளாண்மைத் துறையை நிர்வகிப்பதிலும், அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு முழு உணவு விநியோகத்தையும் வழங்குவதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தொழில்துறையின் பெரும்பகுதி மற்றும் இலகுவான பகுதிகளில் ஈடுபட்டுள்ளது. நிலைத்த மற்றும் நிலைக்காத பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார பொருட்கள், வாகனங்கள், ஜவுளி, ரசாயனங்கள், உணவு பொருட்கள், ஒளி பொறியியல் பொருட்கள் போன்ற பல்வேறு நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் முன் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மிகப்பெரியவை. கட்டமைப்பு மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இலக்குகளைப் பூர்த்தி செய்ய பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்