Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | பொதுத்துறையின் முக்கியத்துவம்

அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பொதுத்துறையின் முக்கியத்துவம் | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்

பொதுத்துறையின் முக்கியத்துவம்

எந்தவொரு பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் பொதுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது பின்வரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

பொதுத்துறையின் முக்கியத்துவம்

எந்தவொரு பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் பொதுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது பின்வரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.


1. பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்: திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்கியது.


2. பொருளாதார மேம்பாடு: பொருளாதார வளர்ச்சி முக்கியமாக தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தது. சிறு தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்க இரும்பு மற்றும் எஃகு , கப்பல் போக்குவரத்து, சுரங்கம் போன்ற கனரக மற்றும் அடிப்படை தொழில்கள் தேவைப்படுகிறது.


3. சமச்சீரான வட்டார வளர்ச்சி: பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் அமைத்துள்ளன. இந்த பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வழங்கல், தன்னாட்சி நகரியம் மற்றும் மனித சக்தி போன்ற அடிப்படை தொழில்துறை மற்றும் குடிமை வசதிகள் இல்லை . பொது நிறுவனங்கள் இந்த வசதிகளை வளர்ச்சியடையச் செய்வதன்மூலம் இந்த வட்டாரங்களில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


4. வேலைவாய்ப்பு உருவாக்கம்: நாட்டில் வேலையின்மை பிரச்சினையைத் தீர்க்க பொதுத்துறை இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. 2011ஆம் ஆண்டில் பணியமர்த்திய நபர்களின் எண்ணிக்கை 150 இலட்சம் ஆகும். ஒரு மாதிரி முதலாளியாக பணியாற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொதுத்துறை அதிக அளவில் பங்களிப்புச் செய்துள்ளது.


5. ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய்: சில பொது நிறுவனங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளன. மாநில வர்த்தக நிறுவனம் (STC), தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக நிறுவனம் (MMTC), இந்துஸ்தான் எஃகு நிறுவனம், பாரத மின்ன ணு நிறுவனம், இந்துஸ்தான் இயந்திர கருவிகள் போன்றவை ஏற்றுமதி மேம்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.


6. நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு: நலிவடைந்த பிரிவு மூடப்படுவதைத் தடுப்பது, பொறுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் பலர் வேலையில்லாமல் இருப்பதைத் தடுப்பது, இதுமட்டுமல்லாமல் மூலதனம், நிலம், கட்டடம், இயந்திரங்கள் போன்றவற்றை தேவையற்ற முறையில் மூடுவதை (Locking) பொதுத்துறை தடுக்கிறது.


7. இறக்குமதி மாற்று:
சில பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும், அந்நிய செலாவணியை சேமிப்பதற்காகவும்

உங்களுக்குத் தெரியுமா

இந்திய இரயில்வேயானது அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும்.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்