Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சன்னல் திரையின் கூறுகள்

விண்டோஸ் - ல் வேலை செய்தல் - சன்னல் திரையின் கூறுகள் | 11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

சன்னல் திரையின் கூறுகள்

படம் 5.10 சன்னல் திரையின் கூறுகளைப் புரிந்து கொள்ள பயன்படுகிறது.

சன்னல் திரையின் கூறுகள்


படம் 5.10 சன்னல் திரையின் கூறுகளைப் புரிந்து கொள்ள பயன்படுகிறது.

சிறிதாக்கு, பெரியதாக்கு மற்றும் மூடு பொத்தான்களும் உள்ளன. 



1. தலைப்புப்பட்டை


திறந்துள்ள ஆவணத்தின் பெயரும், பயன்பாட்டின் பெயரும் தலைப்புப் பட்டையில் தோன்றும். 


2. பட்டிப்பட்டை


தலைப்பு பட்டையின் கீழ் புறம் பட்டிப்பட்டை காணப்படும். Alt பொத்தானை அழுத்தியவாறே பட்டித் தலைப்பில் அடிகோடிட்டு தோன்றும் எழுத்தினையும் அழுத்தி, பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளைப் பயன்படுத்த முடியும். மேலும் Alt பொத்தான் அல்லது F10 பொத்தானை அழுத்தினால் பட்டிபட்டையில் உள்ள முதல் பட்டியை முன்னிறுத்தும்.


விண்டோஸ் 7 இல் பட்டி பட்டை இல்லாவிட்டால் organize பொத்தானில் க்ளிக் செய்து தோன்றும் கீழ்விரிப் பட்டியிலிருந்து layout Option கிளிக் செய்து பட்டிப் பட்டையைத் தோன்றச் செய்யலாம். படம் 5.11ன் மூலம் பட்டி பட்டை தோன்றாவிட்டால் அதை எவ்வாறு தோன்றச் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



3. பணித்தளம்


ஒரு ஆவணத்தில் உரையைத் தட்டச்சு செய்யும் ஆவண சன்னல் திரையின் பகுதி பணித்தளம் ஆகும். படம் 5.10 ஆவண சன்னலின் பணித்தளத்தைக் காட்டுகிறது. 


4. உருளல் பட்டை


உருளல் பட்டைகள் பணித்தளத்தைச் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் உருள் செய்யப் பயன்படுகிறது. படம் 5.10 உருளல் பட்டையின் தோற்றத்தைக் காட்டுகிறது.


5. மூலைகள் மற்றும் எல்லைகள்


விண்டோஸில் அளவை மாற்றி அமைக்க மூலை மற்றும் எல்லை உதவி செய்கிறது. சன்னல் திரையின் மூலைகள் மற்றும் எல்லைகளின் மீது சுட்டியின் அம்புக்குறியை வைக்கும்போது, அது இருதலை கொண்ட அம்புக்குறியாக மாறும். இருதலை அம்புக்குறியின் திசைக்கு ஏற்ப இழுக்கும் போது, சன்னல் திரையின் அளவு மாறும் (படம் 5.10யை காண்க). சன்னலின் மூலைவிட்டத்தில் இருதலை அம்புக்குறியை வைத்து இழுக்கும்போது, அதன் அளவு மாற்றப்படும்.



11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்