Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | இயக்க அமைப்பு ஓர் அறிமுகம்

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

இயக்க அமைப்பு ஓர் அறிமுகம்

இயக்க அமைப்பு (Operating System) ஆகும். இது வன்பொருட்களை, மற்ற மென்பொருட்களுடன் தொடர்பு கொள்ளவும், இயக்கவும் வகை செய்கிறது.

பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் 

பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்


கற்றலின் நோக்கங்கள்


இந்த பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் அறிந்து கொள்பவை 


இயக்க அமைப்பின் கருத்துருக்களைத் தெரிந்துகொள்ளுதல்.


விண்டோஸ் இயக்க அமைப்பின் பதிப்புகளை அறிந்து கொள்ளுதல்.


முகப்புத்திரை மற்றும் சன்னல் திரையின் கூறுகளின் கருத்துருக்களைத் அறிந்து கொள்ளுதல்.


ஆவண சன்னல் திரையை ஆராய்தல்


பல்வேறு வகையான பணிக்குறிகளை ஒப்பிடுதல். 


விண்டோஸ் கோப்புறை அடைவு அமைப்பை ஆராய்தல். ஒரு குறிப்பிட்ட  இயக்கவட்டில் கோப்புகளையும், கோப்புறைகளையும், உருவாக்குவதற்கான பயிற்சி, கோப்புகளையும், கோப்புறைகளையும்  நிர்வகித்தல்.


முறைப்படி ஒரு கணிப்பொறியின் இயக்கத்தைத் தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல்.


இயக்க அமைப்பு ஓர் அறிமுகம்


இயக்க அமைப்பு (Operating System) ஆகும். இது வன்பொருட்களை, மற்ற மென்பொருட்களுடன் தொடர்பு கொள்ளவும், இயக்கவும் வகை செய்கிறது. மேலும், பயனரையும், வன்பொருட்களையும் இணைக்கும் இடைமுகமாகவும், கணிப்பொறியின் அனைத்து இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. (படம் 5.1)



முந்தைய பாடத்தில் கற்ற, இயக்க  அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் பின் வருமாறு : 


நினைவக மேலாண்மை 


செயல் மேலாண்மை 


சாதன மேலாண்மை 


கோப்பு மேலாண்மை  


பாதுகாப்பு மேலாண்மை 


கணிப்பொறி செயல்பாடுகளின் மீதான ஒட்டுமொத்த கட்டுப்பாடு 


பிழை கண்டறியும் சாதனம் 


பயனருக்கும் இதர மென்பொருள்களுக்கும் மென்பொருள் இடையேயான ஒருங்கிணைப்பு.


11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்