Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 7.3: கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் கனஅளவு (Volume of Cuboid and Cube)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | அளவியல் | கணக்க - பயிற்சி 7.3: கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் கனஅளவு (Volume of Cuboid and Cube) | 9th Maths : UNIT 7 : Mensuration

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்

பயிற்சி 7.3: கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் கனஅளவு (Volume of Cuboid and Cube)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 7.3: கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் கனஅளவு (Volume of Cuboid and Cube)

பயிற்சி 7.3

 

1. கீழ்க்காணும் அளவுகளைக் கொண்ட கனச்செவ்வகத்தின் கன அளவைக் காண்க.

(i) நீளம் = 12 செமீ, அகலம் = 8 செமீ , உயரம் = 6 செமீ

(ii) நீளம் = 60 மீ, அகலம் = 25 மீ, உயரம் = 1.5மீ


 

2. ஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6 செமீ × 3.5 செமீ × 2.5 செமீ என உள்ளது. இதே அளவுகளை உடைய 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கனஅளவைக் காண்க.


 

3. ஒரு சாக்லேட் பெட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 5:4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கன அளவு 7500 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.


 

4. ஒரு குளத்தின் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5 மீ, 16 மீ மற்றும் 8 மீ எனில், அந்தக் குளத்தின் கொள்ளளவை லிட்டரில் காண்க.


 

5. ஒரு செங்கல்லின் அளவுகள் 24 செமீ × 12 செமீ × 8 செமீ ஆகும். 20 மீ நீளம், 48 செமீ அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?


 

6. ஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க.


 

7. பின்வரும் பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.

(i) 5 செமீ   (ii) 3.5 மீ   (iii) 21 செமீ


 

8. ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்க நீளத்தை மீட்டரில் காண்க.


 

9. 15 செமீ பக்க அளவுள்ள ஓர் உலோகத்தால் ஆன கனச்சதுரமானது உருக்கப்பட்டு ஒரு கனச்செவ்வகமாக உருவாக்கப்படுகிறது. கனச்செவ்வகத்தின் நீளம் மற்றும் உயரம் முறையே 25 செமீ மற்றும் 9 செமீ எனில் அதன் அகலத்தைக் காண்க.


9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்