Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 7.4: பலவுள் தெரிவு வினாக்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | அளவியல் | கணக்கு - பயிற்சி 7.4: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 7 : Mensuration

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்

பயிற்சி 7.4: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 7.4: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 7.4

 

பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. 15 செமீ, 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு

(1) 60 செமீ

(2) 45 செமீ

(3) 30 செமீ

(4) 15 செமீ

விடை: (3) 30 செமீ

 

2. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு

(1) 3 செமீ2

(2) 6 செமீ2

(3) 9 செமீ2

(4) 12 செமீ2

விடை: (2) 6 செமீ2

 

3. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு

(1) 10√3 செமீ2

(2) 12√3செமீ2

(3) 15√3 செமீ2

(4) 25√3 செமீ2

விடை: (4) 25√3 செமீ2

 

4. 12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு

(1) 144 செமீ2

(2) 196 செமீ2

(3) 576 செமீ2

(4) 664 செமீ2

விடை: (3) 576 செமீ2

 

5. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு

(1) 150 செமீ2

(2) 400 செமீ2

(3) 900 செமீ 2

(4) 1350 செமீ2

விடை: (3) 900 செமீ 2

 

6. 10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு

(1) 280 செமீ2

(2) 300 செமீ2

(3) 360 செமீ2

(4) 600 செமீ2

விடை: (1) 280 செமீ2

 

7. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள்

(1) 4:6

(2) 4:9

(3) 6:9

(4) 16:36

விடை: (2) 4:9

 

8. ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 660 செமீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செமீ2 எனில் அதன் உயரம்

(1) 10 செமீ

(2) 12 செமீ

(3) 20 செமீ

(4) 22 செமீ

விடை: (3) 20 செமீ

 

9. 10மீ × 5மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த் தொட்டியின் கொள்ளளவு

(1) 75 லிட்டர்

(2) 750 லிட்டர்

(3) 7500 லிட்டர்

(4) 75000 லிட்டர்

விடை: (4) 75000 லிட்டர்

 

10. 5மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செமீ × 30 செமீ × 20 செமீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?

(1) 1000

(2) 2000

(3) 3000

(4) 5000

விடை: (1) 1000

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்