Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | கார்பாக்சிலிக் அமில பெறுதிகள்

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்

கார்பாக்சிலிக் அமில பெறுதிகள்

அமில குளோரைடுகள், அமைடுகள், எஸ்டர்கள் போன்றவை கார்பாக்சிலிக் அமில பெறுதிகள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை கார்பாக்சிலிக் அமிலத்தின் -OH தொகுதியை பதிலீடு செய்த அணு அல்லது தொகுதியின் தன்மையில் மட்டுமே கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து வேறுபடுகின்றன.

அமில பெறுதிகளின் ஒப்பு வினைத்திறன்

பெறுதிகளின் ஒப்பு வினைத்திறனானது பின்வரும் வரிசையில் அமைகிறது

i) விட்டுவிலகும் தொகுதியின் காரத்தன்மை 

ii) உடனிசைவு விளைவு

ஆகிய பண்புகளின் அடிப்படையில் மேற்காண் வினைத்திறன் வரிசையை விளக்க முடியும்

(i) விட்டுவிலகும் தொகுதியின் காரத்தன்மை

வலிமை குறைந்த காரத் தொகுதிகள், சிறந்த விலகிச்செல்லும் தொகுதிகளாக செயல்படுகின்றன. எனவே, எளிதாக விலகிச் செல்லும் வலிமை குறைந்த காரத் தொகுதியை (L) கொண்ட அசைல் பெறுதிகள் எளிதாக பிணைப்பை முறித்துக்கொள்வதால் அவை வினைத்திறன் மிக்கவையாகும். விட்டுவிலகிச் செல்லும் தொகுதியின் காரத்தன்மையின் சரியான வரிசை இதன் தலைகீழ் வரிசையில் அவற்றின் வினைத்திறன் அமைகிறது

(ii) உடனிசைவு விளைவு

விட்டு விலகிச்செல்லும் தொகுதியின் எலக்ட்ரான் கவர்தன்மை குறையும்போது, அதன் உடனிசைவு நிலைப்புத்தன்மை கீழே காட்டியுள்ளவாறு அதிகரிக்கிறது.

இந்த விளைவின் காரணமாக மூலக்கூறு அதிக நிலைப்புத்தன்மையை பெறுவதால் அசைல் சேர்மத்தின் வினைதிறன் குறைகிறது. விலகிச்செல்லும் தொகுதிகளின் எலக்ட்ரான் கவர்தன்மை பின்வரும் வரிசையில் அமைகிறது.

Cl >- OCOR > - OR > - NH3 

எனவே, கருகவர் காரணிகளுடனான அமில பெறுதிகளின் வினைத்திறன் வரிசை

அமில ஹேலைடுகள் > அமில நீரிலிகள் > எஸ்டர்கள் > அமில அமைடுகள் 

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்