பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - வடிவியல் | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

வடிவியல்

கற்றல் நோக்கங்கள்: ● முக்கோணம் அமைவதைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றின் அடிப்படைக் கூறுகளை அறிதல். ● முக்கோணங்களின் வகைகள் மற்றும் பண்புகளை அறிதல். ● மூலைமட்டத்தைப் பயன்படுத்தி இணைகோடுகள் மற்றும் செங்குத்துக்கோடுகள் வரைதல்.

இயல் 4

வடிவியல்



கற்றல் நோக்கங்கள்:

முக்கோணம் அமைவதைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றின் அடிப்படைக் கூறுகளை அறிதல்.

முக்கோணங்களின் வகைகள் மற்றும் பண்புகளை அறிதல்.

மூலைமட்டத்தைப் பயன்படுத்தி இணைகோடுகள் மற்றும் செங்குத்துக்கோடுகள் வரைதல்.


அறிமுகம்

முதல் பருவத்தில் கோணங்கள் மற்றும் அதன் வகைகள், கோட்டுத்துண்டு வரைதல், கோணங்களை அளத்தல் மற்றும் வரைதல் போன்ற அடிப்படை வடிவியல் கருத்துகளைப் பற்றிக் கற்றோம். இப்பருவத்தில் முக்கோணங்கள் மற்றும் அதன் வகைகள், கொடுக்கப்பட்ட கோட்டுத்துண்டிற்கு இணைகோடுகள் மற்றும் செங்குத்துக்கோடுகள் வரைதல் ஆகியவற்றைப் பற்றிக் கற்போம்.

எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் முக்கோணங்கள்


பாலங்கள், கட்டடங்கள், கைப்பேசி கோபுரங்கள், விமான இறக்கைகள் மற்றும் வீட்டின் கூரைப்பகுதிகள் அமைத்தல் உள்ளிட்ட பெரும்பாலான கட்டுமான வேலைகளில் முக்கோணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமானப் பணிகளில் நிலையான, கட்டுறுதியான மற்றும் வலிமையான கட்டமைப்பை முக்கோணங்கள் வழங்குகின்றன.

இந்தச் சூழல் குறித்துச் சிந்திக்க:

ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு 2, 3, 4 மற்றும் 5 எண்ணிக்கையிலான சம நீளமுள்ள குச்சிகளைக் கொடுத்து மூடிய வடிவங்களை உருவாக்கச் சொல்கிறார். அவர்களுள் மூன்று மாணவர்கள் பின்வருமாறு வடிவங்களை உருவாக்குகிறார்கள்.


ஆனால் ஒரு மாணவர் மட்டும் தன்னிடமுள்ள இரண்டு குச்சிகளைக் கொண்டு பின்வரும் வடிவத்தை உருவாக்குகிறார்.


அவரால் மூடிய வடிவத்தை உருவாக்க இயலவில்லை. ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு மூடிய வடிவத்தை உருவாக்கக் குறைந்தபட்சம் எத்தனை குச்சிகள் தேவை என உங்களால் சிந்திக்க முடிகிறதா? மூன்று குச்சிகள். அவ்வாறு மூன்று குச்சிகளைக் கொண்டு ஒரு மூடிய வடிவத்தை உருவாக்க முடிகிறது எனில், எந்த வடிவத்தை நீங்கள் பெறுகிறீர்கள்? அதற்கு ஏதேனும் சிறப்புப் பெயர் உண்டா? ஆம். அது ஒரு முக்கோணம் ஆகும்.

மூன்று நேர்க்கோட்டுத்துண்டுகளால் அமைந்த ஒரு மூடிய உருவமே முக்கோணம் ஆகும்.

செயல்பாடு

பின்வருவனவற்றுள் முக்கோணம் மற்றும் முக்கோணம் அல்லாத வடிவங்களை வகைப்படுத்துக.


விடை 


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்