Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | நினைவில் கொள்க

வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க:

மூன்று கோட்டுத்துண்டுகளால் அமைந்த ஒரு மூடிய உருவமே முக்கோணம் ஆகும்.

ஒரு முக்கோணமானது 3 பக்கங்கள், 3 கோணங்கள் மற்றும் 3 முனைகளைப் பெற்றிருக்கும்

பக்கங்களின் அடிப்படையில், முக்கோணங்களை அசமபக்க முக்கோணம், இருசமபக்க முக்கோணம், சமபக்க முக்கோணம் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

கோணங்களின் அடிப்படையில், முக்கோணங்களைக் குறுங்கோண முக்கோணம், செங்கோண முக்கோணம் மற்றும் விரிகோண முக்கோணம் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவை விட அதிகமாக இருக்கும். இது முக்கோணச் சமனின்மைப் பண்பு ஆகும்

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180°.

மூலைமட்டங்களைப் பயன்படுத்தி இணை மற்றும் செங்குத்துக்கோடுகளை எளிதாக வரையலாம்.

இரு இணைகோடுகளுக்கு இடைப்பட்ட செங்குத்துத் தொலைவு மாறாமல் இருக்கும்.




இணையச் செயல்பாடு

வடிவியல்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, GeoGebra இணையப் பக்கத்தில் "Geometry" என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். அதில் 1. Types of triangles, 2. Perpendicular line construction மற்றும் 3. Parallel line construction ஆகிய மூன்று செயல்பாடுகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

முதல் செயல்பாட்டில் திரையில் தெரியும் நழுவலை நகர்த்தியோ அல்லது கோணத்தை உள்ளீடு செய்தோ முக்கோணங்களின் கோணங்களை மாற்றவும். மேலும் அம்முக்கோணம் எவ்வகை என்றும் அதன் கோணங்களையும் ஒப்பீடு செய்க.

படி 2: இரண்டு மற்றும் மூன்றாம் செயல்பாடாக காணொலிகளைப் பயன்படுத்தி இணை மற்றும் செங்குத்துக் கோடுகள் வரைவதை அறியலாம்.


செயல்பாட்டிற்கான உரலி:

வடிவியல்: https://ggbm.at/p7DZHP6K அல்லது விரைவு குறியீட்டை ஸ்கேன் செய்க.


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்