Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்

இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனாவ் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

விடை

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

 

2. சார்பெழுத்துகன் எத்தனை? அவை யாவை?

விடை

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை.

1. உயிர்மெய்

2. ஆய்தம்

3. உயிரளபெடை

4. ஒற்றளபெடை

5. குற்றியலிகரம்

6. குற்றியலுகரம்

7. ஐகாரக்குறுக்கம்

8. ஒளகாரக்குறுக்கம்

9 மகரக்குறுக்கம்

10. ஆய்தக்குறுக்கம்

 

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

விடை

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. (.கா) : அஃது, இஃது



மொழியை ஆள்வோம்


 

கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க

1. இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.

விடை

இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

2. பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.

விடை

மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

 

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கன், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


1. எதனை இயற்கை என்கிறோம்?

விடை

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.

 

2. இப்பத்தியில் உன்ன இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?

விடை

பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.

 

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

விடை

நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

விடை

இயற்கை வளம்.

 

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக.

மாமழை

வான் சிறப்பு

முரல் மீன்

வலசைபோதல்

பறவை இனங்கள்

சார்பு எழுத்துகள்

சாண்டியாகோ

தோற்கடிக்க முடியாது

காணிநிலம்

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

இயற்கையைக் காப்போம்

முன்னுரை:

இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

இயற்கை இன்பம் :

இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பனிபடர்ந்த மலைகள், பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும். பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள், நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல், பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.

இயற்கை இன்பத்தை இழக்கிறோம் :

இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றது. மலைகளின் சரிவு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம். போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டது. இவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டன. வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கைச் சூழல் :

வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.

முடிவுரை :

பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டு, மெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். அணுத்தீமை, நீர்நிலை அழிப்பு, சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டு, பசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.


 

மொழியோடு விளையாடு



திரட்டுக.

கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.

1. அரி

2. அலை

3. ஆர்கலி

4. ஆழி

5. திரை

6. விரிநீர்

7. முந்நீர்

8. பரவை

9. சமுத்திரம்

10. அழவம்

11. பெருநீர்

12. பௌவம்

 

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

(.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

 

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)

3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள்

(அலைத்தாள் / அழைத்தாள்),

 

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

1. 'புள்' என்பதன் வேறு பெயர்

2. பறவைகள் இடம்பெயர்தல்

3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்


 

 வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

விடை

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

விடை

பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார்

விடை

சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

விடை

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

 

கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.


1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

3. திங்கள் என்பதன் பொருள் நிலவு

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை

5. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.

6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்தனிநிலை

விடை

1. மணிமேகலை

2. முப்பது

3. நிலவு

4. செங்கால் நாரை

5. காணி நிலம்

6. தனிநிலை

 

ஆய்ந்தறிக.

பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?

விடை

பெருகிவரும் மக்கள் தொகையின் காரணத்தினால் நமது தேவைகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தோன்றியபோது அவன் கண்ட இயற்கைச் சூழலைக் கண்டு வியந்தான். அவற்றின் உதவியோடு வாழத் தொடங்கினான். காலப்போக்கில் நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி எனப் பல படிநிலைகளில் மாற்றங்களைக் கண்டான்.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள் இவற்றால் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம். இயற்கையாக அமைந்த நிலம், நீர், காடு, காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டினோம். தொழிற்சாலைகளை வளர்த்து நீர், காற்று ஆகியவற்றைச் சீர் கேடாக்கினோம். நிலத்தையும் விட்டுவைக்கவில்லை. இவையெல்லாம் சீர் அழிந்ததால் தேனீ, சிட்டுக்குருவி போன்ற பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகி விட்டோம். தேனீக்கள் வளர்வதற்கான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டன. ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுவதால் நீரின் அளவும் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்தனர். அதனால் அவற்றைத் தெய்வமாக எண்ணி வழிபட்டனர். இயற்கைக்கு மாறாக நாம் பல வழிகளில் இயற்கை வளங்களைக் குறைத்து விட்டோம்.

இயற்கை வளங்கள் என்பது ஒன்றோடொன்றுதொடர்புடைய சங்கிலித்தொடர் போன்றது. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தும், தட்ப வெப்பநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாற்றம் அடைகிறது. புவி வெப்பமயமாகிறது. பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.

இவற்றை முற்றழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் மேம்பாடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அரசு முடக்கம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க, பசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்தப் பசுமை அமைப்பு செழுமை, வளமை, தூய்மை என்ற அடிப்படையில் தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அவ்வப்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுமாறு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நிகழ்த்த வேண்டும். காடுகளை அழிக்காமல், மலைகளைத் தகர்க்காமல், மண் வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமிலவாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்து நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம். குறைந்து வரும் வேளாண் தொழிலை புதுமுறைக் கல்வித் துறைகளால் மேம்படுத்தி பூமியைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நாம் இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

 

கவிதை படைக்க.

கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக. வானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

…………………………………
………………………………..
………………………………..

விடை :

வானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

ஆற்றில் வெள்ளம் பெருகிடும்

அணைகள் நிரம்பி வழிந்திடும்

நிலத்தடி நீரும் ஊறிடும்

பயிர்கள் செழிக்க உதவிடும்

இயற்கை எல்லாம் சிரித்திடும்

இன்பக் கடலில் ஆழ்த்திடும்

பட்ட மரங்கள் துளிர்த்திடும்

பாரே உன்னைப் போற்றிடும்.


நிற்க அதற்குத் தக


என் பொறுப்புகள்...

) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்

) இயற்கையைப் பாதுகாப்பேன்

 

கலைச் சொல் அறிவோம்

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Clinate

வானிலைWeather

வலசை - Migration

புகலிடம் - Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - GravitationalField

 


 இணையத்தில் காண்க


அழித்து வரும் உயிரினங்கள்பற்றி இணையத்தில் தேடி அறிந்து பட்டியவிடுக.

 

இணையச் செயல்பாடுகள்

பறவைகள் வலசைபோதல்

செயல்பாட்டில் கிடைக்கப்பெறும் படம்


படிகள்:

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'globcofoird migration' என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும்.

இணையச் செயலி இயங்கு நிலைக்கு வர, சற்று நேரம் ஆகும். அதுவரை காத்திருக்கவும். இணையச்செயலி தயார் நிலைக்கு வந்தவுடன் ஓர் உலக உருண்டையைக் காணலாம். அதன் மையத்தில் இருக்கும் 'Cliek to St.an ' என்பதைச் சொடுக்கவும். இப்போது திரையின் இடப் பக்கத்தில் பறவைகளின் பெயர்ப் பட்டியல் தெரியும். அதில் ஏதேனும் ஒரு பறவையைத் தெரிவு செய்து அதன் வலசை போகும் பாதையைத் தெரிந்து கொள்ளலாம்.

 பூமி உருண்டையைச் சுழற்றுவதன் மூலம் வெவ்வேறு பறவைகளின் வலசை போதலை அறியலாம்.

செயல்பாட்டிற்கான உரலி: Intp://globeofhirimigration.com/

 


கற்பவை கற்றபின் 


 

1. முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க

விடை

மாணவன் 1 : வணக்கம்! இன்று வகுப்பில் ஆசிரியர் இலக்கணம் கற்பித்ததில் எனக்கு 3 ஓர் ஐயம் உள்ளது. அதனைக் கொஞ்சம் தீர்த்து வைக்க இயலுமா.

மாணவன் 2 : உன்னுடைய ஐயம் என்னவென்று கூறு. என்னால் இயன்றவரை கூறுகிறேன். முதலெழுத்து, சார்பெழுத்து பற்றித்தானே!

மாணவன் 1 : ஆமாம்ஆமாம்முதலெழுத்து என்பது முப்பது. அவை உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகும்.

மாணவன் 2 : சரிதான். எழுதப்படுவதால் எழுத்து எனக் கூறப்படுகிறது. எழுத்துக்கள் ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இருவகை வடிவினை உடையன. இதில் வரி வடிவ எழுத்துகளையே நாம் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பகுத்துக் கூறுகிறோம்.

மாணவன் 1 : முதலெழுத்து எனக் கூறக் காரணம் என்ன?

மாணவன் 2 : இம்முப்பது எழுத்துகள் இல்லாமல் தமிழ்மொழி இல்லை. ஆதலாலும் இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது. எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.

மாணவன் 2 : சரியாகக் கூறியுள்ளாய். மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். இவ்வாறு முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்குகிறது. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 ஆகும்.

மாணவன் 1 : அடுத்ததாக உள்ள சார்பெழுத்து ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளிகளை உடையது. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆயிற்று.

மாணவன் 2 : இதேபோன்று உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவை பிற எழுத்துகளின் சார்பினாலேயே ஓசையில் நீண்டும், ஓசையில் குறைந்தும் ஒலிக்கும். ஆதலால் இவை சார்பெழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : ஓசையில் நீண்டும், குறைந்தும் என்கிறாயா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்.

மாணவன் 2 : உயிரளபெடையும் ஒற்றளபெடையும் மாத்திரையளவில் நீண்டு

ஒலிக்கும். (.கா.) 1. உயிரளபெடை தொழாஅர், கெடுப்பதூஉம் 2. ஒற்றளபெடை கலங்கு.

மாணவன் 1 : ஓசை குறைதல் என்றாயே?

மாணவன் 2 : ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவை தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.

(.கா.) ஐகாரக் குறுக்கம் தலைவன்

ஔகாரக் குறுக்கம் ஔவையார்

மகரக்குறுக்கம் வரும் வண்டி

ஆய்தக் குறுக்கம் அஃறிணை

இதேபோன்று குற்றியலுகரம், குற்றியலிகரம், இவையிரண்டும் தன் மாத்திரையளவில் குறைந்து ஒலிக்கும்.

(.கா.) குற்றியலுகரம் காது, அஃது, பாக்கு

குற்றியலிகரம் வீடு + யாது வீடியாது, கேண்மியா, சென்மியா.

மாணவன் 1 : முதலெழுத்து, சார்பெழுத்தைப் பற்றி இனிமேல் மறக்கவே முடியாது. அதுபோல நன்கு விளங்கும்படிக் கூறியுள்ளாய் மிக்க நன்றி.

 

2. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக.

(.கா) ஆம்

விடை

முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்கள் :

ஆம்

ஆள், ஆல், ஆண், ஆன், ஆய், ஆர்

உன், உண்,ஊழ், ஊண், ஊன், ஊர்

என், எண், எள், ஏன், ஏர், ஏண், ஏம், ஏல்

ஈர், ஓர்

 

3. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக. (.கா.) குருவி

விடை

குருவி

கருவி, கனவு, கனி, கதை

மருவி, பணிவு, தனிமை, கவிதை

தருவி, கனிவு, பொதுமறை, பெருமை

தருக, வருக, தீமை, கருமை

 

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்