Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: வழக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வழக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

இலக்கணம்: வழக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : இலக்கணம்: வழக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : கற்கண்டு : வழக்கு)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

பொருத்துக.

வினா: 

1. பந்தர் - முதற்போலி 

2. மைஞ்சு - முற்றுப்போலி 

3. அஞ்சு - இடைப்போலி 

4. அரையர் - கடைப்போலி

விடை: 

1. பந்தர் - கடைப்போலி 

2. மைஞ்சு - முதற்போலி 

3. அஞ்சு - முற்றுப்போலி 

4. அரையர் - இடைப்போலி


குறு வினா 

1. வழக்கு என்றால் என்ன?

முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். 


2. தகுதி வழக்கின் வகைகள் யாவை? 

தகுதி வழக்கு மூன்று வகைப்படும். 

இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி.


3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. 

இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக. 

இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்: நஞ்சு. சரியான சொல்: நைந்து. 

வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. 

வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது.



கற்பறை கற்றபின் 


1. மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து தொகுக்க. 




மொழியை ஆழ்வோம்


கேட்க.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.


கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுக. 

1. தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர் 

வணக்கம்!

தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத் தேவர் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள்.

முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. மேலும், வாய்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார். நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார், அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939 இல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார் 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டணை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். 

தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத் தேவர் போல உழைப்போம்! உயர்வோம்! நன்றி! 


2. கப்பலோட்டிய தமிழர் : வ.உ.சிதம்பரனார். 

வணக்கம்!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள்.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது. சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத்தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘வந்தே மாதரம்' என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர்.

ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது. வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற 'உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன் என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.அவரைப்போல நாட்டுக்காக உழைப்போம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். 

நன்றி! 


அறிந்து பயன்படுத்துவோம். 

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும். 

அவை 1. எழுவாய், 2. பயனிலை, 3. செயப்படுபொருள்


எழுவாய்

ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.

சான்று: 

நீலன் பாடத்தைப் படித்தான்.

பாரி யார்?

புலி ஒரு விலங்கு

பயனிலை  

ஒரு தொடரில் வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

சான்று: 

கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

கரிகாலன் யார்?

கரிகாலன் ஒரு மன்னன்.

செயப்படுபொருள்

யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள். 

சான்று:  

நான் கவிதையைப். படித்தேன். 

என் புத்தகத்தை எடுத்தது யார்?

நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான். 


பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க 

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர். 

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர். 

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது. 

4. திருக்குறளை எழுதியவர் யார்? 

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

எழுவாய் 

வீரர்கள்

பொதுமக்கள்

பாண்டியனுடைய 

திருக்குறளை

கபிலர்

பயனிலை 

காத்தனர்

தீயிட்டு எரித்தனர்

மீனக்கொடி பறந்தது

யார்?

குறிஞ்சிப்பாட்டை

செயப்படுபொருள் 

நாட்டைக் 

அந்நியத் துணிகளைத் 

கொற்கைத் துறைமுகத்திலே 

எழுதியவர் 

எழுதிய புலவர் 



எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

1. கண்ணன் பாடம் படித்தான். 

2. மேரி ஓவியம் வரைந்தாள். 

3. நான் கவிதை எழுதினேன். 

4. விதை விருட்சமாக வளர்ந்தது. 

5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார். 


கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

நான் விரும்பும் தலைவர் - பெரியார் 

முன்னுரை:

ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். அதன் தந்தை பெரியார். வெண்தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரியார் நான் விரும்பும் தலைவர் ஆவார். 

இளமை:

ஈரோடு நகரில் 1879 இல் பெரியார் பிறந்தார். தொடக்கக் கல்வியுடன் தம் படிப்பை நிறுத்திக் கொண்டு தம் தந்தையின் வணிகத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

வைக்கம் வீரர்:

கேரளத்தில் வைக்கம் என்னும் ஊரில் தலை விரித்தாடிய தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதனால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். 

சுயமரியாதை இயக்கம்:

பெரியார் காங்கிரசிலிருந்து விலகி 1925 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக சாதி ஏற்றத்தாழ்வு போக்குதல், தீண்டாமை ஒழித்தல், மூடநம்பிக்கை ஒழித்தல், பெண்ணுரிமை நிலைநாட்டுதல் ஆகும். 

பெரியார் சீரமைத்த எழுத்துகள்:

'ஐ' என்பதை 'அய்' எனவும், 'ஔ' என்பதை 'அவ்' எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார். 

பெண்ணுரிமை போற்றியவர்:

பெண்ணுரிமை, பெண் கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, மறுமணம் ஆகியவற்றிற்காகப் பெரியார் போராடினார். பெண்கள் மாநாடுகள் பல நடத்தி பெண்களை விழிப்படையச் செய்தார். 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்குப் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது. 

கவரக் காரணம்: 

சிக்கனம் மற்றும் எளிமையான வாழ்கை. 

சுயமரியாதை போற்றல். 

பெண்ணுரிமை பேசுதல். 

சாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் களைதல். 

கல்வியில் புரட்சி

 - ஆகிய காரணங்களால் பெரியாரை விரும்புகின்றேன். 

முடிவுரை:

தொண்டு செய்து பழுத்த பழமான பெரியாரைப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.



மொழியோடு விளையாடு


இடைச்சொல் ‘கு' சேர்த்து எழுதுக. 

எ.கா: வீடு சென்றான் - வீடு+கு+சென்றான். - வீட்டுக்குச் சென்றான். 

1. மாடு புல் கொடுத்தார். - மாடு+கு+புல் கொடுத்தார். - மாட்டுக்குப் புல் கொடுத்தார். 

2. பாட்டு பொருள் எழுது. - பாட்டு+கு+பொருள் எழுது. - பாட்டுக்குப் பொருள் எழுது. 

3. செடி பாய்ந்த நீர். - செடி+கு+பாய்ந்த நீர் - செடிக்குப் பாய்ந்த நீர் 

4. முல்லை தேர் தந்தான் பாரி. - முல்லை+கு+தேர் தந்தான் பாரி. - முல்லைக்குத் தேர் தந்தான் பாரி. 

5. சுவர் சாந்து பூசினாள். - சுவர்+கு+சாந்து பூசினாள். - சுவருக்குச் சாந்து பூசினாள். 


இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.


அகம் என முடியும் சொற்களை எழுதுக. 

நூலகம், குறளகம், நகலகம், அச்சகம், துறைமுகம், தமிழகம். 


கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக. 

1. திருக்குறள் பால்களைக் கொண்டது. 

2. எனது வயது கக. 

3. நான் படிக்கும் வகுப்பு எ 

4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும். 

5. திருக்குறளில் கஙங அதிகாரங்கள் உள்ளன. 

6. இந்தியா ககூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.


குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.


விடை :


1. மூதறிஞர்  - இராஜாஜி

2. வீரமங்கை  - வேலுநாச்சியார்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன்  - கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன் - சின்னமலை

5. கொடிகாத்தவர்  - திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் - கக்கன்

7. தில்லையாடியின் பெருமை  - வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர்  - சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன்  - பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர்  - காமராசர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி  - நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி - வாஞ்சிநாதன்


நிற்க அதற்குத் தக...


என் பொறுப்புகள் ....

1. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.

2. தலைவர்களின் அரிய பண்புகளை உணர்ந்து பின்பற்றுவேன் 


கலைச்சொல் அறிவோம்

1. கதைப்பாடல் - Ballad

2. துணிவு - Courage

3. தியாகம் - Sacrifice

4. அரசியல் மேதை - Political Genius

5. பேச்சாற்றல் - Elocution 

6. ஒற்றுமை - Unity 

7. முழக்கம் – Slogan

8. சமத்துவம் - Equality


இணையத்தில் காண்க

வ.உ. சிதம்பரனார் வாழ்க்கைக் குறிப்புகளை இணையத்தில் தேடி எழுதுக.



7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு