Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: பாஞ்சை வளம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

வகானமகாமர்ல | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாஞ்சை வளம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

கவிதைப்பேழை: பாஞ்சை வளம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : கவிதைப்பேழை: பாஞ்சை வளம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - வகானமகாமர்ல : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : கவிதைப் பேழை : பாஞ்சை வளம்) 


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. ஊர்வலத்தின் முன்னால் ------  அசைந்து வந்தது.

அ) தோரணம் 

ஆ) வானரம் 

இ) வாரணம் 

ஈ) சந்தனம் 

[விடை : இ. வாரணம்]


2. பாஞ்சாலங்குறிச்சியில்  -------- நாயை விரட்டிடும்.

அ) முயல் 

ஆ) நரி 

இ) பரி

ஈ) புலி

[விடை : அ. முயல் ]


3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ________

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு 

ஆ) படுக்கையறை உள்ள வீடு 

இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு 

ஈ) மாடிவீடு

[விடை : ஈ. மாடிவீடு] 


4. ‘பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) பூட்டு + கதவுகள்

ஆ) பூட்டும் + கதவுகள் 

இ) பூட்டின் + கதவுகள்

ஈ) பூட்டிய + கதவுகள்

 [விடை : ஆ. பூட்டும் + கதவுகள்] 


5. “தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ 

அ) தோரணம் + மேடை

ஆ) தோரண + மேடை 

இ) தோரணம் + ஒடை

ஈ) தோரணம் + ஓடை

[விடை : அ. தோரணம் + மேடை] 


6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) வாசல்அவங்காரம்

ஆ) வாசலங்காரம் 

இ) வாசலலங்காரம்

ஈ) வாசலிங்காரம்

[விடை : இ. வாசலலங்காரம்] 


பொருத்துக. 

வினா :

பொக்கிஷம்  - அழகு

சாஸ்தி - செல்வம்

விஸ்தாரம் - மிகுதி

சிங்காரம் - பெரும்பரப்பு 

விடை : 

பொக்கிஷம் - செல்வம் 

சாஸ்தி - மிகுதி 

விஸ்தாரம் - பெரும்பரப்பு 

சிங்காரம் - அழகு 


குறுவினா 

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.

அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும். 


2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும். 


சிறுவினா 

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்? 

பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். 

வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். 

வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும். 


2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக. 

வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் - வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும். 

மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது. 


சிந்தனை வினா

நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன? 

மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர். 

அஞ்சா நெஞ்சினர். 

ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.



கற்பவை கற்றபின்


உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.

முடுகு 

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் 

கட்டியே காத்தவன் கட்டபொம்மன்

ஆத்துரு வாழும் அண்ணா சாய்பு

அண்ணனும் தம்பியும் வல்லவனாம்

குளத்தூர் வாழும் சுப்பையா

கொள்ளை யடிப்பதில் வல்லவனாம் 

கிழக்கே எல்லையாம் கீழக்கரை 

மேக்க எல்லையாம் சூலக்கரை 

ஆயிரம் கண்ணுள்ள மாரியம்மா 

ஆதரிக்க வேணும் இந்த நேரம் 


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு