Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | தரை அலைப் பரவல் (Ground wave propagation (or) surface wave propagation)

மின்காந்த அலைகளின் பரவல் - தரை அலைப் பரவல் (Ground wave propagation (or) surface wave propagation) | 12th Physics : UNIT 10b : Communication Systems

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

தரை அலைப் பரவல் (Ground wave propagation (or) surface wave propagation)

பரப்பியினால் பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் ஏற்பியைச் சென்றடைய புவியின் தரையை தழுவிக்கொண்டு சென்றால், இந்தப் பரவல் தரை அலைப் பரவல் எனப்படும்.

தரை அலைப் பரவல் (Ground wave propagation (or) surface wave propagation)

பரப்பியினால் பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் ஏற்பியைச் சென்றடைய புவியின் தரையை தழுவிக்கொண்டு சென்றால், இந்தப் பரவல் தரை அலைப் பரவல் எனப்படும். தொடர்புடைய அலைகளானது தரை அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள் எனப்படுகின்றன. இதன் காட்சி விளக்கப்படம் 10.5 (அ) இல் காட்டப்பட்டுள்ளது.

பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ண லைக்கம்பிகள் இரண்டும் புவிக்கு அருகில் இருக்க வேண்டும். விண்ணலைக்கம்பியின் அளவு சைகைகளின் பரப்புதலின் பயனுறுதிறனை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பரப்புகையின் போது மின் சைகைகள் நீண்ட தொலைவிற்கு செல்லும்போது வலுவிழக்கின்றன. வலுவிழப்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு :

* அதிகரிக்கும் தொலைவு: தொலைவைப் பொருத்து, சைகையில் ஏற்படும் வலுவிழப்பு (i) பரப்பியின் திறன் (ii) பரப்பியின் அதிர்வெண் மற்றும் (iii) புவிப்பரப்பின் நிலை ஆகியவற்றைச் சார்ந்தது .

* புவியினால் ஆற்றல் உறிஞ்சப்படுதல் : மின்காந்த அலை வடிவில் உள்ள பரப்பப்படும் சைகையானது புவியைத் தொடும்போது, அது புவியில் ஒரு மின்னூட்டத்தைத் தூண்டி ஒரு மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புவியானது ஒரு கசியும் மின்தேக்கியைப் போல் செயல்படுகிறது. அதனால் அலை வலுவிழக்கிறது.

* அலை சாய்தல் : அலை முன்னேறும்போது புவியின் வளைபரப்புக்கு ஏற்றவாறு அலைமுகப்பு படிப்படியாக சாயத் தொடங்குகிறது. இந்த சாய்வின் அதிகரிப்பு அலையின் மின்புல வலிமையைக் குறைக்கிறது. இறுதியாக ஒரு குறிப்பிட்ட தொலைவைக் கடந்தவுடன், ஆற்றல் இழப்பு காரணமாக மேற்பரப்பு அலை முழுவதுமாக நின்றுவிடுகின்றது.


படம் 10.5 மின்காந்த அலைகள் பரவல் (அ) தரை அலை (ஆ) வான் அலை (இ) வெளி அலை (ஈ) அனைத்து வகை பரவல்களின் சுருக்கம்

உயர் அதிர்வெண் அலைகளுக்கு புவியின் காற்று மண்டலத்தில் அதிக ஆற்றல் உறிஞ்சப்படுவதால், தரை அலைகளின் அதிர்வெண் பெரும்பாலும் 2MHz ஐ விட குறைவாக இருக்கும். பகல் நேரங்களில் ஏற்கப்படும் நடுத்தர அலை (medium wave) சைகைகள் மேற்பரப்பு அலைப் பரவலைப் பயன்படுத்துகிறது.

இது முக்கியமாக உள்ளூர் ஒலிபரப்பு, ரேடியோவின் உதவியால் கடற்பயணம், கப்பலில் இருந்து கப்பல் மற்றும் கப்பலில் இருந்து கடற்கரை தகவல் தொடர்பு மற்றும் செல்பேசி தகவல்தொடர்பு ஆகியவற்றில் பயன்படுகிறது.

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்