வளம், இயற் பண்புகள் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I
தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள்:
கார்பன், தனித்த நிலையில் கிராஃபைட்டாக காணப்படுகிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் கால்சைட் , மேக்னசைட் போன்ற கார்பனேட் பாறைகளில் கார்பன் மற்ற தனிமங்களுடன் சேர்ந்த நிலையில் மிக அதிகளவில் காணப்படுகிறது.சிலிக்கான் ஆனது சிலிக்காவாக (மணல் மற்றும் குவார்ட்ஸ் படிகம்) காணப்படுகிறது. கனிம சிலிக்கேட்கள் மற்றும் களிமண் ஆகியன சிலிக்கானின் மற்ற முக்கியமான மூலங்களாகும்.
14 ஆம் தொகுதி தனிமங்களின் சில இயற் பண்புகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டவணை 2.4 - 14 ஆம் தொகுதி தனிமங்களின் இயற் பண்புகள்
