தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தமிழ்நாட்டின் இறக்குமதிகள் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
தமிழ்நாட்டின் இறக்குமதிகள்
இயந்திரக்
கருவிகளான போக்குவரத்து சாதனங்கள், இயந்திர உபகரணங்கள், மின்சாதனமல்லா
இயந்திரங்கள், மின்சாதன பொருள்கள், மருந்துப்
பொருள்கள், பெட்ரோலியம், உரங்கள் மற்றும்
செய்தித்தாள் ஆகியவை முக்கிய இறக்குமதிகளாகும். நாட்டின் வணிகத்தில்
தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் 10.94% பங்களிப்பைச் செய்கின்றன.

மேலே
விவாதிக்கப்பட்ட கருத்துகளின் மூலம் தமிழகமானது பரப்பு, மக்கள் தொகை,
வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு முக்கிய மாநிலம்
என்பது தெளிவாகிறது. இம்மாநிலத்தில் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
தமிழக அரசால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் இம்மாநிலமானது
அனைத்து துறைகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.