Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

அறிமுகம் | வரலாறு - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டில் வணிகமும் நகரமயமாக்கமும் மீட்டுருவாக்கம் பெற்று, வட இந்தியாவில் ஒரு புதிய நாகரிகம் வளர்ச்சி பெறக் காரணமாயின.

அலகு 4

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

 


கற்றல் நோக்கங்கள்

கி.மு. (பொ..மு). 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. (பொ..மு).2ம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட சமுதாய மாற்றம் பற்றி அறிதல்

இந்தியாவின் புத்தம், சமணம், ஆசிவகம், பாரசீகத்தின் ஜொராஸ்ட்ரியம், சீனாவின் கன்பூசியனிசம், தாவோயிசம் ஆகிய புதிய தத்துவங்களின் சாரத்தைப்புரிந்து கொள்ளுதல்

  அரசுகள் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்ற சூழல்கள் குறித்துக் கற்றல். குறிப்பாக மகதப் பேரரசு குறித்து அறிதல்

மௌரியர் காலத்திற்கு முன்பும், மௌரியர் ஆட்சியிலும் நிகழ்ந்த சமூக - அரசியல் மாற்றங்களை எடுத்துரைத்தல்

 

அறிமுகம்

கி.மு. (பொ..மு). ஆறாம் நூற்றாண்டில் வணிகமும் நகரமயமாக்கமும் மீட்டுருவாக்கம் பெற்று, வட இந்தியாவில் ஒரு புதிய நாகரிகம் வளர்ச்சி பெறக் காரணமாயின. முக்கியமான சமூக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த இக்கால கட்டத்தில்தான் புத்தரும் மகாவீரரும் தோன்றினர். அவர்களின் மறைவுக்குப் பிந்தைய நூற்றாண்டில், புத்த, சமணக் கோட்பாடுகள் இந்தியாவில் முக்கியமான சமயங்களாகப் பரவின. புதிய நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தாங்கி, அவற்றைப் பின்பற்றும் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் எழுச்சிமிக்க சமயக் கோட்பாடுகளாக இவை பரவின. இதே காலகட்டத்தில் புத்த, சமண சமயங்களைப் போலவே பாரசீகத்தில் ஜொராஸ்ட்டிரியனிசமும் சீனாவில் கன்பூசியனிசமும் தாவோயிசமும் தோன்றின.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்