லென்சு சமன்பாடு
கோளக ஆடிகளின் ஆடிச்சமன்பாட்டைப்
போலவே, கோளக லென்சுகளுக்கு
லென்சு சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இச் சமன்பாடு பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v) மற்றும்
குவியத் தொலைவு (f) ஆகியவற்றைத் தொடர்பு படுத்துகிறது.
லென்சு சமன்பாடானது,
1/f = 1/v – 1/u ..........(2.2) எனக்
குறிக்கப்படுகிறது.

இது குவிலென்சு மற்றும் குழிலென்சு
ஆகியவற்றிற்குப் பொதுவானது.
லென்சு தொடர்பான கணக்குகளுக்கு
விடைகாண முற்படும் போது, பயன்படுத்தப்படும் அளவுகளுக்கான தகுந்த குறியீட்டினை மிகுந்த கவனத்துடன்
கையாள வேண்டும்.