Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மனித காதுகள் செயல்படும் விதம்

ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மனித காதுகள் செயல்படும் விதம் | 8th Science : Chapter 6 : Sound

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

மனித காதுகள் செயல்படும் விதம்

ஒலியைக் கேட்க உதவும் முக்கியமான உறுப்பு காது ஆகும். நாம் காதுகள் வழியாக ஒலியைக் கேட்க முடிகிறது. மனிதக் காது காற்றில் உள்ள உயர் அதிர்வெண் கொண்ட உள்ளிழுத்து பகுத்தாய்கிறது.

மனித காதுகள் செயல்படும் விதம்

ஒலியைக் கேட்க உதவும் முக்கியமான உறுப்பு காது ஆகும். நாம் காதுகள் வழியாக ஒலியைக் கேட்க முடிகிறது. மனிதக் காது காற்றில் உள்ள உயர் அதிர்வெண் கொண்ட உள்ளிழுத்து பகுத்தாய்கிறது. அதிர்வுகளை அவற்றைப் நீர்வாழ் விலங்குகளின் காதுகள் நீரின் அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதக் காதுகளின் வெளிப்புறப்பகுதியானது காது மடல் எனப்படும். இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியைச் சேகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. பின்னர் அதுசெவிக்குழாய் வழியாக செவிப்பறையை|டிம்பானிக் சவ்வு) அடையும். ஒளி செவிப்பறையை அடையும்போது, செவியிலுள்ள சிற்றெலும்புகள் முன்னும் பின்னும் நகர்ந்து அதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த அதிர்வுகள் உட்செவியிலுள்ள சிறப்பு செல்களை அடைகின்றன. உள் காதில் இருந்து அதிர்வுகள் சமிக்ஞைகள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. மூளை இந்த சமிக்ஞைகளை ஒலிகளாக உணர்கிறது.


8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்