அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் | 8th Science : Chapter 6 : Sound

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

ஒலியியல்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ ஒலி உருவாகுதலைப் புரிந்து கொள்ளல். ❖ ஓர் ஊடகத்தில் ஒலி பரவுதலை விளக்குதல். ❖ ஒலியின் பண்புகளைப் பகுப்பாய்வு செய்தல். ❖ ஒலியின் அலைப் பண்பை விளக்குதல். ❖ஒலி கேட்கும் வழிமுறை பற்றி அறிந்து கொள்ளல். ❖ ஒலி மாசுபாடு மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதித்தல்

அலகு 6

ஒலியியல்


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

ஒலி உருவாகுதலைப் புரிந்து கொள்ளல்.

ஓர் ஊடகத்தில் ஒலி பரவுதலை விளக்குதல்.

ஒலியின் பண்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.

ஒலியின் அலைப் பண்பை விளக்குதல்.

ஒலி கேட்கும் வழிமுறை பற்றி அறிந்து கொள்ளல்.

ஒலி மாசுபாடு மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதித்தல்


 

அறிமுகம்

நம் அன்றாட வாழ்க்கையில் பலவிதமான ஒலிகளைக் கேட்கிறோம். இடி ஓசை, பறவைகளின் ஒலி, விலங்குகளின் ஒலி, இலைகளின் சலசலப்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சியிலிருந்து வெளிவரும் இசை மற்றும் வாகனங்களின் சத்தம் ஆகியவை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் சில ஒலிகளாகும். ஒவ்வொரு ஒலிக்கும் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கு ஒலி நமக்கு உதவுகிறது. விலங்குகளும் தங்கள் இனத்தின் பிற உறுப்பினர்களுடன் ஒலியின் உதவியுடன் தொடர்பு கொள்கின்றன. இசை போன்ற சில ஒலிகள் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன. நாம் அவற்றைக் கேட்க விரும்புகிறோம். ஆனால் சில ஒனிகள், எடுத்துக்காட்டாக, இரைச்சல் விரும்பத்தகாதது. இந்தப் பாடத்தில் ஒலியின் உருவாக்கம் மற்றும் பரவுதல், மனித குரல்வளை அமைப்பு, கேட்டல், ஒலி மாசுபாடு மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து கற்க இருக்கிறோம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்