Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நுண்ணுயிரிகள்

அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகள் | 8th Science : Chapter 16 : Microorganisms

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகள்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன: • பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைப் பற்றி புரிந்துகொள்ளல். • வடிவம் மற்றும் அமைவிடத்தைப் பொருத்து நுண்ணுயிரிகளை வேறுபடுத்துதல். • மருத்துவம், விவசாயம், தொழிற்சாலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் நுண்ணுயிரிகளின் பங்கினைப் பற்றி அறிதல். • தீங்கு தரும் நுண்ணுயிரிகளின் விளைவுகள் குறித்து அறிதல். • நுண்ணுயிரிகள் மற்றும் மனிதனுக்கு இடையேயான தொடர்பினைப் புரிந்துகொள்ளல். • மனித உடல் நலனில் பிரியான் மற்றும் விரியானின் விளைவுகளைப் பற்றி அறிதல்.

அலகு 16

நுண்ணுயிரிகள்


 

ற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:

• பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைப் பற்றி புரிந்துகொள்ளல்.

• வடிவம் மற்றும் அமைவிடத்தைப் பொருத்து நுண்ணுயிரிகளை வேறுபடுத்துதல்.

• மருத்துவம், விவசாயம், தொழிற்சாலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் நுண்ணுயிரிகளின் பங்கினைப் பற்றி அறிதல்.

• தீங்கு தரும் நுண்ணுயிரிகளின் விளைவுகள் குறித்து அறிதல்.

• நுண்ணுயிரிகள் மற்றும் மனிதனுக்கு இடையேயான தொடர்பினைப் புரிந்துகொள்ளல்.

• மனித உடல் நலனில் பிரியான் மற்றும் விரியானின் விளைவுகளைப் பற்றி அறிதல்.



 

அறிமுகம்

கண்களுக்குத் தெரியாத அளவிற்கு நுண்ணுயிரிகள் அளவில் மிகவும் சிறியவை. இவ்வுயிரினங்களை நுண்ணோக்கியின் உதவியினால் மட்டுமே காண இயலும். எனவே, அவை நுண்ணுயிரிகள் எனப்படுகின்றன. நுண்ணுயிரிகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு நுண்ணுயிரியியல் எனப்படும். நுண்ணுயிரிகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.  அவை காற்று, நீர் (குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்), மண் மற்றும் நம் உடலுக்கு உள்ளேயும்கூட காணப்படுகின்றன. பாதகமான சூழ்நிலைகளில் அவை செயலற்ற நிலையில் இருந்து சாதகமான சூழ்நிலையின்போது செயல்படத் துவங்குகின்றன. நுண்ணுயிரிகளைப் பற்றி ஐந்து பிரிவுகளின் கீழ் நாம் படிக்கலாம். அவையாவன: வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா மற்றும் புரோட்டோசோவா. அவற்றைப் பற்றி இப்பாடத்தில் நாம் விரிவாகக் காண்போம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்