நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 16 : Microorganisms
செயல்பாடு
1
ஒரு கண்ணாடி நழுவத்தில் ஒன்று
அல்லது இரண்டு துளிகள் தயிரை எடுத்துக் கொண்டு, அதனைப் பரவச் செய்யவும். அந்த நழுவத்தினை
இலேசாக சூடுபடுத்தவும் (3-4 நொடிகள்] அதன் மீது சில துளிகள் படிக வடிவிலான நீலச்சாயத்தினைச்
சேர்த்து, 30 அல்லது 60 நொடிகள் கழித்து நீரால் கழுவாயும். கூட்டு நுண்ணோக்கியினால்
அந்நழுவத்தினை உற்று நோக்கவும்.
செயல்பாடு 2
வைக்கோலை
ஊற வைத்த நீரினை ஒன்று அல்லது இரண்டு துளிகள் நழுவத்தில் எடுத்துக் கொண்டு நுண்ணோக்கியின்
வழியாக உற்று நோக்கவும்.