Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகள் (Non−polynomial Equations)

எடுத்துக்காட்டு கணக்குகள் | சமன்பாட்டியல் - பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகள் (Non−polynomial Equations) | 12th Maths : UNIT 3 : Theory of Equations

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல்

பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகள் (Non−polynomial Equations)

சில பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகளையும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளின் துணையோடு தீர்க்க இயலும்.

3. பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகள் (Non−polynomial Equations)

சில பல்லுறுப்புக்கோவையற்ற சமன்பாடுகளையும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளின் துணையோடு தீர்க்க இயலும். உதாரணமாக √[15 − 2x] = x என்ற சமன்பாட்டைக் கருதுவோம். முதற்கண் இது பல்லுறுப்புக்கோவை அன்று என்பது குறிப்பிடத்தக்கது. இருபக்கமும் வர்க்கம் காண x2 + 2x − 15 = 0 எனக் கிடைக்கும். இந்த பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டை எவ்வாறு தீர்ப்பது என்பதை நாம் அறிவோம். பல்லுறுப்புக்கோவையின் தீர்வுகளிலிருந்து கொடுக்கப்பட்ட சமன்பாட்டை ஆராய்ந்தால் 3 மற்றும் −5 ஆகியவை x2 + 2x – 15 = 0 −க்கு தீர்வுகளாக அமையும். √• மதிப்பிற்கு குறையற்ற மதிப்புகளை மட்டுமே ஒதுக்கீடு செய்வது என்பதை கருத்தில் கொண்டால் x = 3 என்பது மட்டுமே மூலமாகும். அத்தகைய ஒதுக்கீடு இல்லையெனில் x = −5 என்பதும் தீர்வாகும்.


எடுத்துக்காட்டு 3.29

2 cos2 x − 9 cos x + 4 = 0. ... (1)

எனும் சமன்பாட்டிற்குத் தீர்வு இருப்பின் காண்க.

தீர்வு

சமன்பாட்டின் இடப்பக்கம் இருப்பது பல்லுறுப்புக்கோவை அல்ல. ஆனால் பல்லுறுப்புக்கோவை போல் தோற்றமளிக்கிறது. உண்மையில், இதனை cos.xல் இருக்கும் ஒரு பல்லுறுப்புக்கோவை எனலாம். எனினும் (1) −ல் உள்ள சமன்பாட்டைத் தீர்க்க பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளைப் பற்றி நாம் அறிந்தவற்றைப் பயன்படுத்தலாம். cos.x y எனப் பிரதியிட 2y2 − 9y + 4 = 0 எனும் பல்லுறுப்பு கோவைச் சமன்பாடு கிடைக்கிறது. 4 மற்றும் 1/2 ஆகியவை இதன் தீர்வுகளாகும்.

இதிலிருந்து cos x = 4 அல்லது cos x = 1/2 −க்கு ஏற்றதாக x அமையவேண்டும். ஆனால் cos x = 4 என்பது சாத்தியமில்லாதது. cos x = 1/2 −எனும்போது எண்ணற்ற பல மெய்யெண் மதிப்புள்ள x அமைகின்றது. உண்மையில் அனைத்து n க்கும் x = 2nπ ± π/3 = என்பது கொடுக்கப்பட்ட சமன்பாடு (1) க்கு தீர்வாகும்.

cos2x − 9cosx + 20 = 0 என்ற சமன்பாட்டிற்கு இதே வழிமுறைகளை கடைபிடித்தால் சமன்பாட்டிற்கு தீர்வே இல்லை என்பது புலனாகிறது.


குறிப்புரை

வருவிக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் அனைத்து தீர்வுகளும் கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு ஒரு தீர்வாக ஆகாது.

பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளைப் போல தோற்றமளித்தாலும் பல்லுறுப்புக் கோவையற்ற சமன்பாடுகளுக்கு எண்ணற்றத் தீர்வுகள் இருக்கலாம்.

அத்தகைய சமன்பாடுகளுக்கு தீர்வு இல்லாமலும் இருக்கலாம்.

அடிப்படை இயற்கணித தேற்றம் பல்லுறுப்புக்கோவைகளுக்கு மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்லுறுப்புக் கோவையற்றவைகளுக்கு படியைப் பற்றியே கூற முடியாததால் பல்லுறுப்புக் கோவையற்றவைகளை மனதில் கொண்டு அடிப்படை இயற்கணித தேற்றத்தில் எந்த குழப்பமும் தேவையில்லை.

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல்