Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | இயற்கை பண்ணை முறை

சுற்றுச்சூழல் பொருளியல் - இயற்கை பண்ணை முறை | 12th Economics : Chapter 10 : Environmental Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்

இயற்கை பண்ணை முறை

இயற்கைப் பண்ணை முறை என்பது கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிர்ப் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியும் பருப்பு வகைகள் போன்றவற்றைப் பயிரிட்டு பயிர்ச் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும்.

இயற்கை பண்ணை முறை (Organic Farming)

இயற்கைப் பண்ணை முறை என்பது கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிர்ப் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியும் பருப்பு வகைகள் போன்றவற்றைப் பயிரிட்டு பயிர்ச் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும். இதில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதில்லை . இயற்கை இடுபொருட்கள் நுண்ணுயிரிகளை வளர்த்து நிலத்தின் செழிப்புத் தன்மையை அதிகப்படுத்துகின்றது. விவசாய சூழல் அமைப்பில் உள்ள நிலத்தின் தன்மை, பயிர்கள், கால்நடைகள் மற்றும் மக்களைக் கருத்தில் கொண்டு உத்தம அளவு உற்பத்தி செய்யும் உள்ளடக்கிய அமைப்பு முறையே இயற்கைப் பண்ணைகளாகும். நீடித்த நிலைத்த சுற்றுச்சூழலோடு இணைந்த அமைப்புக்களை உருவாக்குவதே இயற்கை உற்பத்தியின் முக்கிய குறிக்கோளாகும். இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் பின்வருமாறு.

1. சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், மண்வளக்குறைவைத் தடுத்தல், உயிரியல் உற்பத்தியை உத்தமப்படுத்துதல் மற்றும் சிறந்த உடல்நலத்தை ஊக்குவித்தல். 

2. மண்ணுக்குள் உயிரியல் நடவடிக்கைகளை மேம்படுத்தி மண்ணின் வளத்தன்மையை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கச் செய்தல். 

3. அமைப்புக்குள் உயிரியல் மாற்றங்களை நிலைத்திருக்கச் செய்தல். 

4. நிறுவனத்தின் பொருட்களையும் வளத்தையும் அதிக அளவு மறுசுழற்சிக்கு உட்படுத்துல்.

5. கால்நடைகளை நன்கு பராமரித்து அவற்றின் நலத்தை மேம்படையச் செய்தல். 

6. எல்லா உற்பத்தி நிலைகளிலும் இயற்கை நேர்மையையும் முக்கிய பண்புகளையும் கடைப்பிடித்து கையாள்வதிலும் பதப்படுத்துதலிலும் கவனமாக இருந்து இயற்கைப் பொருட்களை தயாரிக்க வேண்டும். 

7. அப்பகுதியிலுள்ள அமைப்பு சார்ந்த விவசாய முறைகளிலுள்ள மறுசுழற்சி செய்யும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. கால்நடைகளை நன்கு பராமரித்து அவற்றின் நலத்தை மேம்படையச் செய்தல். 

6. எல்லா உற்பத்தி நிலைகளிலும் இயற்கை நேர்மையையும் முக்கிய பண்புகளையும் கடைப்பிடித்து கையாள்வதிலும் பதப்படுத்துதலிலும் கவனமாக இருந்து இயற்கைப் பொருட்களை தயாரிக்க வேண்டும். 

7. அப்பகுதியிலுள்ள அமைப்பு சார்ந்த விவசாய முறைகளிலுள்ள மறுசுழற்சி செய்யும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


உவர் நிலம் (Alkali Soil)

பாசன வசதி பெற்ற நிலங்கள் மற்றும் வறண்ட பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 50 சதவீத நிலங்களில் ஓரளவு உவர் பிரச்சனை உள்ளது. பயிரின் வேர்ப்பகுதிகளில் அதிக அளவு உப்பு/ அமிலம் படிந்து நிலத்தின் உற்பத்தித் திறனை பகுதியாகவோ அல்லது முழு அளவாகவோ பாதிக்கின்றது. இத்தகைய நிலங்கள் பிரச்சனை (உவர், உப்பு, மற்றும் அமிலம்) நிலங்கள் எனப்படுகின்றது. இத்தகைய நிலங்கள் பாசனவசதி பெறாத வறண்ட நிலங்களில் காணப்படுகின்றது.

இத்தகைய உவர் நிலங்கள் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கிய இந்து கங்கைச் சமவெளிகளில் காணப்படுகின்றது. சத்தீஸ்கார், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒருசில பகுதிகளிலும் காணப்படுகின்றது.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்