Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: தன்னை அறிதல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

சே. பிருந்தா | பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தன்னை அறிதல்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

கவிதைப்பேழை: தன்னை அறிதல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : கவிதைப்பேழை: தன்னை அறிதல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - சே. பிருந்தா : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : கவிதைப் பேழை : தன்னை அறிதல்)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. கூடுகட்டத் தெரியாத பறவை ---------- 

அ) காக்கை

ஆ) குயில் 

இ) சிட்டுக்குருவி

ஈ) தூக்கணாங்குருவி

[விடை : ஆ. குயில்] 


2. ‘தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------

அ) தா + ஒரு 

ஆ) தான் + னொரு 

இ) தான் + ஒரு 

ஈ) தானே + ஒரு 

[விடை : இ. தான் + ஒரு] 


குறுவினா 

1. காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச்சொன்னது?

காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. 

2. குயில் குஞ்சு தன்னை எப்போது 'குயில்' என உணர்ந்தது?

ஒரு விடியலில் குயில் குஞ்சு "கூ” என்று கூவியது. அன்று தான் ஒரு 'குயில்' என உணர்ந்தது. 


சிறுவினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக. 

• காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. 

• அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. 'கா' என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை. 

• அதற்குக் கூடுகட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை .குளிர், மழை, வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது. 

• வாழ்கையை வாழப் பழகிவிட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது, அன்று தான் ஒரு 'குயில்' என உணர்ந்தது.


சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?

• அனைவரிடமும் அன்பாகப் பழகுவது, 

• உண்மை பேசுவது, 

• தன்னம்பிக்கையுடன் இருப்பது, 

• மனம் தளராமை 

- ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.



கற்பவை கற்றபின்


பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுக. 

1. நாய், பூனை - மோப்ப சக்தி 

2. காக்கை - கூடி உண்ணும், துக்கத்தை கூடி அனுசரிக்கும். 

3. கிளி - பேசும்


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்