12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தான் அறிமுகம்

பைத்தான் என்பது பொது பயன்பாடு நிரலாக்க மொழி ஆகும். இதை நெதர்லாந்தின் கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் CWI (Centrum Wiskunde & Informatica)-mw Chris கைடோவான் ரோசும் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அலகு II

பாடம் 5

பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்தப் பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள் அறிந்துக் கொள்வது:

• வரைகலை பயனாளர் இடைமுகம் (GUI) மற்றும் ஒருங்கிணைந்த உருவாக்க சூழலில் பைத்தான் நிரல்களை உருவாக்குதல்.

• ஊடாடும் மற்றும் ஸ்கிரிப்ட் முறைமையில் நிரல் உருவாக்குதல்.

• மாறிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றிக்கு மதிப்பிருத்தல்.

• பைத்தானில் உள்ள பல்வேறு தரவு வகைகளின் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்ளுதல்.

• பல்வேறு வகையான செயற்குறிகளின் பயன்பாடுகளை புரிந்துக் கொள்ளுதல் (கணித, ஒப்பீட்டு மற்றும் தருக்க)

• பைத்தான் கோவைகள் மற்றும் கூற்றுகளை உருவாக்குதல்.


அறிமுகம்

பைத்தான் என்பது பொது பயன்பாடு நிரலாக்க மொழி ஆகும். இதை நெதர்லாந்தின் கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் CWI (Centrum Wiskunde & Informatica)-mw Chris கைடோவான் ரோசும் என்பவரால் உருவாக்கப்பட்டது. இம்மொழி 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பைத்தான் அதன் பெயரை, எழுபதுகளில் பிரபலமான பிபிசிநகைச்சுவை தொடரான “மோன்டிபைத்தான்'ஸ் ஃப்ளையிங் சர்க்கஸ்” இருந்து பெற்றது. பைத்தான் கட்டமைக்கப்பட்ட நிரலாக்க மொழி மற்றும் பொருள் நிரலாக்க மொழியை ஆதரிக்கிறது.


12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்