Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இயல் நான்கு

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்

 ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

 ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டவைகும்.

i) , ஆகியன சரி; தவறு 

ii) , ஆகியன சரி; தவறு

iii) அதவறு; , ஆகியன சரி 

iv) மூன்றும் சரி

விடை : ii) , ஆகியன சரி; தவறு

 

2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

) தேசியத் திறனாய்வுத் தேர்வு 

) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

) தேசியத் திறனாய்வுத் தேர்வ 

) மூன்றும் சரி

விடை: ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

 

குறுவினா

1. இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

விடை :

இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் 

1. தொலைநகல் இயந்திரம் (Fax)

2. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)

3. அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)

4. தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS) 

5. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

 

சிறுவினா

1. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

விடை :

. தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.

. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு - தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)

• 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு - ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)

. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு - தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்

. 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு, ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

. அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

 

நெடுவினா

1. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

விடை :

தற்காலத்தில் பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவு தங்கும் விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப் பலமுகமைகள் உள்ளன. இது பலருக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. பெரு நகரங்களில் திரைப்படங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்வது கூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி , தண்ணீர் வரி, ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. இச்சேவைகளில் ஒன்று பயணச்சீட்டு வழங்குவதையும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையும் பயனுள்ள வகையில் செய்து வருகிறது. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம். மற்றொன்று தானியக்கப் பண இயந்திரம்.

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC - INDIAN RAILWAY CATERING AND TOURISM CORPORATION)

   மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும். பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது. வங்கி அட்டைகளின் உதவியுடன் தெகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)

இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது. வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

 

கற்பவை கற்றபின்


1. வங்கியில் இணையவழிச் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் நடைமுறையை எழுதுக:

நாம் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் வங்கிக்கு நேரில் சென்று தான் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இணையவழி சேமிப்புக் கணக்கு இருந்தால் மற்ற பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே வங்கிப் பணிகளையும் செய்து கொள்ளலாம்.

இணையவழி சேமிப்புக் கணக்கு:

முதலில் நாம் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறோமோ? அந்த வங்கிக்குரிய செயலியை (APP) முதலில் நம் கணினியிலோ அல்லது அலைபேசியிலோ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், பின்னர் மின் அஞ்சல் முகவரி (E-Mail ID) ஒன்றும், கடவு வார்த்தை (Password) ஒன்றும் உருவாக்குதல் வேண்டும்.

பெயர்

வங்கிக் கணக்கு எண் :

வங்கிக் கிளை :

வங்கி குறியீட்டு எண் :

என மேற்கூறிய அனைத்தையும் குறிப்பிட்டு, இணையவழி (Net Banking) மூலம் வங்கி சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

 

2. உங்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற தொடர்வண்டிப் பயணத்திற்கு இணையத்தில் எவ்வாறு முன்பதிவு செய்தீர்கள்? அதன் வழிமுறைகளை அனுபவத்தில் () கேட்டறிந்து வகுப்பறையில் வழங்குக.

நாங்கள் கடந்தவாரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு தொடர் வண்டியில் (வண்டி எண் 12672) இரவு 20.30 மணிக்கு முன்பதிவு செய்தோம். இரண்டாம் வகுப்பு (S - 6, 45, 46, 47, 48) தூங்கும் வசதி உள்ள பெட்டியில் இரண்டு நடுப்படுக்கை , இரண்டு கீழ்படுக்கை முன்பதிவு செய்து தானியக்கப் பண இயந்திர அட்டை மூலம் பணம் செலுத்தி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பயணச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்து சுகமான பயணம் மேற்கொண்டோம்.

இணையத்தில் தொடர்வண்டிப் பயணத்திற்கு முன்பதிவு செய்தல்:

● மாணவர்களே! நாம் பயணம் செய்ய திட்டமிடும் பொழுதே, பயணத்திற்கான சீட்டை இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம்

●இன்றைய காலக்கட்டத்தில் இணையதளத்தில் பயணச் சீட்டை பதிவு செய்வது மிகவும் எளிது. நம் நேரமும், பெருமளவு மிச்சமாகும்

●பயணம் மேற்கொள்ள வேண்டிய ஊருக்கு உங்கள் ஊரில் இருந்து செல்லும் தொடர் வண்டிகளை அறிந்து கொண்டு, அவற்றின் நேரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

●பயணம் செய்ய விரும்பும் நாளில் எந்த தொடர்வண்டியில், எந்த பெட்டியில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் இருக்கும் காலியிடங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிய முனையும் போதே பயணச் சீட்டுக்கான தொகையும் அறிந்து கொள்ளலாம்.

●பின்னர் வங்கி அட்டைகளின் உதவியுடன், பயணச் சீட்டிற்கான தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம் எனில், சற்று நேரத்தில் நமது அலைபேசிக்கு குறுஞ்செய்தியும், அச்செய்தியில் நமக்கான இருக்கை எண் , புறப்படும் நேரம் போன்றவை வந்துவிடும்.

●மின் அஞ்சலில் பயணச்சீட்டும் வந்துவிடுகிறது. நாம் பயணம் செய்யும் பொழுது, குறுஞ்செய்தியையும், நம்முடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்டி சுகமான பயணத்தை மேற்கொள்ளலாம்.

● களைப்பின்றி பயணம் செய்ய இணையவழி பதிவு முறையே சிறந்ததாகும்.

 

3. விரலியில் (Pendrive) உள்ள பாடல்களையும், எழுத்துக் கோப்புகளையும் (Document) கணினியில் நுழைந்து உறைகளில் (Folder) இட்டுச் சேமிப்பதைச் செய்து பார்த்துத் தெரிந்து கொள்க.

● 'விரலி என்ற வார்த்தை Pendrive என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும்.

● விரலியில் உள்ள பாடல்கள் எழுத்துக் கோப்புகளை கணினியில் சேமிக்கும் முறை:

● முதலில் விரலியை அதன் பகுதியில் நுழைத்தல் வேண்டும்.

● கணினித் திரையில் குறியீடு ஒன்று தோன்றும்.

● அந்தக் குறியீட்டை இயக்கும் போது, விரலியில் உள்ள செய்திகளை எந்தப் பகுதியில் சேமிக்க வேண்டும், தனி உறை வேண்டுமா என்று திரையில் தோன்றும்.

●கோப்புகள் உள்ள பகுதியில் சேமிக்க வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட கோப்புப் பகுதியை இயக்கி அதனுடன் சேமித்துக் கொள்ளலாம்.

● தனியாக ஒரு உறையை உருவாக்கியும் சேமித்துக் கொள்ளலாம்.

●திரையின் முகப்புப் பகுதியில் உறையை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால் விரலி மூலம் நாம் சேமித்த செய்திகள் பாடல்கள், எழுத்துக் கோப்புகளை உடனடியாக இயக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

● இதுவே விரலியில் உள்ளனவற்றை கணினியில் சேமிக்கும் முறையாகும்.

 

கவிதைப்பேழை

இயல் நான்கு

, என் சமகாலத் தோழர்களே!


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பின்வரும் தொடர்களைப் படித்துநான் யார் என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.

இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.

) இணையம்

) தமிழ்

) கணிணி

 ) ஏவுகணை

விடை: ) தமிழ்

 

குறுவினா

1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.

விடை:

பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.

 

சிறுவினா

1. 'என் சமகாலத் தோழர்களே" கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

விடை:

● அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.

● அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

 

 

கற்பவை கற்றபின்


1. அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

விடை:

) நீர்நின் றிளகிற் றிதுவேண்டா

- சீவகசிந்தாமணி (காந்தருவதத்தை இலம்பகம்)

அறிவியல் செய்தி:

  மரத்தில் செய்யப்படும் வீணையே இன்னிசை எழுப்ப ஏற்றது. மரத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதில் மோதும் ஒலி அலைகளின் அதிர்வெண்ணும் வேறுபடும். சீவகன், தத்தை கொடுத்த யாழினை ஆராயும் போது, நீரில் இருந்து ஊறிய மரத்தால் செய்யப்பட்ட யாழில், அதிர்வெண் வேறுபட்டு சமச்சீரற்று காணப்படும் என்பதால்நீர்நின் றிளகிற் றிதுவேண்டாஎன்றான்.

) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஔவையார்

 “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” – கம்பர்

அறிவியல் செய்தி:

  அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற இன்றைய அறிவியலை நம் கவிஞர்கள் அன்றே தம் கவிதைகளில் கூறியுள்ளனர். அணுசேர்ப்பும், அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளன.

) “அகல்வயல் பொழிந்தும்........

உறுமிடத் துதவா உவர்நிலம்.......” - புறநானூறு பரணர்

பயவாக் களரணையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்

அறிவியல் செய்தி:

  எவ்வளவு மழை பொழிந்தாலும் "களர்நிலம்என அழைக்கப்படும் உவர்நிலம் எதற்கும் உதவாது என்ற மண்ணியல் அறிவியலைக் கூறுகிறது.

  இவ்வாறு நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய கவிதைகள் பல, நமக்கு அறிவியல் செய்திகளைக் கூறுவதாக உள்ளன என்பதை மறுக்க இயலாது.

 

2. விமானமும் ஏவுகணையும் பேசிக்கொள்வது போல ஓர் உரையாடலைக் குழுவாகச் சேர்ந்து உருவாக்குக.

விடை:

விமானமும் - ஏவுகணையும் பேசுவதுபோல உரையாடல்

விமானம் : வணக்கம்! ஏவுகணை அவர்களே!

ஏவுகணை : வணக்கம்! வணக்கம் !

விமானம் : ஐயா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

ஏவுகணை : எனக்கும் மகிழ்ச்சி

விமானம் : என் பெயர் விமானம். நான், மக்களை நாடுவிட்டு நாடு செல்ல உதவும் பொருட்டு வானில் பறப்பேன். அதனால் என்னை வானூர்தி என்றும் அழைப்பர்.

ஏவுகணை : அப்படியா! நான் அதற்கும் மேலே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மேலே சென்று செயற்கைகோள்களை அதனதன் பாதையில் நிறுத்துவேன்.

விமானம் : அப்படியா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதே. என்னை இயக்க விமானி துணை விமானி எல்லாம் இருப்பார்கள். உங்களை இயக்க....

ஏவுகணை : ஆளெல்லாம் இருக்கமாட்டார்கள். ஏவு ஊர்தியில் என்னை நிறுத்தி, இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே எண்நிலை (count down) தொடங்கி கண்காணித்து, குறிப்பிட்ட நேரம் வந்தவுடனே என்னை மிக வேகமாக ஏவி விடுவார்கள். நானே குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுவேன்.

விமானம் : என்னை பூமியில் இருந்து கண்காணிப்பது போல் உங்களையும் கண்காணிப்பார்களா!

ஏவுகணை : ஆம்! என்னையும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

விமானம் : நன்றி!!

ஏவுகணை : நன்றி!!

 

3. பாடலில் அமைந்துள்ள தொடைநயங்களை எழுதுக:

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்

கிழக்கு வானம் தூரமில்லை

முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்

பூமி ஒன்றும் பாரமில்லை .

விடை:

தொடைநயங்கள் :

1. கிளிக்கு, கிழக்கு - முதல் எழுத்து ஒன்றிவந்துமோனை நயம்உள்ளது.

முளைக்கும் - முளைக்கத்

இதில், முதல் எழுத்து ஒன்றிவந்து "சீர் மோனை' நயமும்

இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து "சீர் எதுகை" நயமும் இடம் பெற்றுள்ளது.

3. தூரமில்லை - பாரமில்லை

இதில்மில்லை " என்னும் இறுதி சீர் ஒன்றி வந்துஇயைபுத் தொடை" நயம் அமைந்துள்ளது.

 

 

கவிதைப்பேழை

இயல் நான்கு

உயிர்வகை


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?

) நுகர்தல்     

) தொடு உணர்வு 

) கேட்டல்

) காணல்

விடை : ) தொடு உணர்வு

 

குறுவினா

1. மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

விடை:


சிறுவினா

1. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?


 


கற்பவை கற்றபின்



1. ) தட்டான் பூச்சி தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும்.

) வானில் பறக்குது குதிரை பறக்கப் பறக்க வால் குறையும் குதிரை - அது என்ன?

விடை : விமானம்

இவை போன்ற அறிவியல் செய்திகள் கொண்ட பழமொழிகள், விடுகதைகளைப் படித்தும் கேட்டும், அவற்றின் அறிவியல் அடிப்படையை வகுப்பறையில் கலந்துரையாடுக.

 விடை :

அறிவியல் சார்ந்த பழமொழிகள் விடுகதைகள்

விடுகதைகள்

1. செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன், கையிலும் வைக்கலாம், பையிலும் வைக்கலாம், நானின்றி இன்று மனித உயிர்கள் இல்லை. நான் யார்?

விடை : அலைபேசி

2. காற்றுப் புக முடியாத இடத்திலும் நான் புகுவேன். எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள தன்மையை செய்தியாகப் புகைப்படமாக அனுப்புவேன். ஆராய உகந்தவன். நான் யார்?

விடை: செயற்கைக்கோள்

பழமொழிகள்

1. அறிவை மேம்படுத்துவது அறிவியல்.

2. அறிவியல் இல்லாத ஆன்மீகம் முடமாகும்.

3. ஆறாவது அறிவே அறிவியல்.

4. அறிவியல் அறிவை மேம்படுத்தும்; அறிவு வாழ்வை மேம்படுத்தும்.

5. இன்றைய அறிவியலே நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி.

 

 2. ‘விமான நிலையத்தில் நான்’ - கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.

விமான நிலையத்தில் நான்

(கற்பனைக் கதை)

அன்று காலையில் இருந்தே எனக்குள் ஒரே பரபரப்பு... இனம் புரியாத குதூகலம் என மனதுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி பதற்றம் என ஒரு மாதிரியான உணர்வுகள் வந்து போய்க் கொண்டிருந்தன.

ஏன் தெரியுமா. நான் முதன் முதலில் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி சுற்றுலா செல்லப் போகிறேன் குடும்பத்தில் எல்லோரும் என்னைப் போன்றே இருந்தனர்.

என் தந்தை, என் பெரிய சகோதரர் எல்லாரும் முன்பே விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார்கள். நான் மட்டும் தான் முதன் முதலில் விமானத்திலும் பயணம் செய்ய போகப் போகிறேன் விமான நிலையத்துக்குள்ளும் செல்லப் போகிறேன்.

புறப்படும் வேளை வந்தது ...... ஆர்வத்துடன் அவரவர் பயணச் சுமைகளுடன் வாகனத்தில் ஏறினோம். வாகனம் விரைந்து சென்றது விமான நிலையம் நோக்கி......

குறிப்பிட்ட எல்லை வரைதான் வாகனத்தை அனுமதித்தார்கள் உள்ளே மெதுவாக படபடப்புடன் நுழைந்தேன்....

ஒலி பெருக்கியில் அறிவிப்பு ஒரு புறம். மின் எழுத்துகளில் அறிவிப்பு பலகைகள் ஒரு புறமாய் ஆரவாரமாய் இருந்தது.

நுழைவுவாயிலைக் கடந்தேன்... சோதனையிடுவதற்கு அழைத்தார்கள் அனுமதிக்கப்படாத பொருள்கள் நாம் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.

எங்கள் விமானம் வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சென்று விட்டோம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நிகழ்வும் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று விமானநிலையத்தில் பரபரப்பு ....... செய்தியாளர்கள் தடதடவென ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தால் தற்பொழுது வந்து தரை இறங்கிய விமானத்தில் இருந்து பிரபல தமிழ் கவிஞர் ஒருவரும், அரசியல் தலைவர் ஒருவரும் வருகிறார்களாம்..... அவர்களுள் அரசியல் தலைவரை நேர் காணல் செய்வதற்காக செய்தியாளர்கள் ஓடிவந்தனர்.... அதனையும் கண்டு களித்தேன்......

நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் வருவதற்கான அறிவிப்பு வந்தது, ஓடு தளத்தில் நின்ற விமானத்தில் ஏறுவதற்கான ஆயத்தப் பணிகளாக முதலில் எங்கள் கூடுதல் சுமைகளை எடுத்தனர்.

பின்னர் வாகனத்தில் எங்களை ஏறச்செய்து, பிரம்மாண்டமான ஓடுதளத்தில் கம்பீரமாக நின்ற விமானத்தின் அருகில் கொண்டு நிறுத்தினார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கி விமானத்தில் விமானப்பணிப் பெண்ணின் இனிய வரவேற்போடு விமானத்துக்குள் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து.... மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் செய்தோம்.



விரிவானம்

இயல் நான்கு

விண்ணையும் சாடுவோம்


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. விடை வரிசையைத் தேர்க.

) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி

i) நேவிக், சித்தாரா   

ii) நேவிக், வானூர்தி

iii) வானூர்தி, சித்தாரா  

iv) சித்தாரா, நேவிக்

விடை: iv) சித்தாரா, நேவிக்

 

குறுவினா

1. செயற்கைக் கோள் ஏவு ஊர்தியில் பொருந்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது

விடை:

●இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 1982 ஆம் ஆண்டுதான் வேலையில் சேர்ந்தார். திரு. சிவன் 1983 ஆம் ஆண்டு முதல் முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தை தொடங்க மைய அரசு இசைவு தந்தது.

●அங்கு பணிபுரியும் அறிவியலாளர்கள் அனைவருக்குமே இத்திட்டப்பணி புதிதுதான். ஆனால் சிவன் அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்து ஒரு செயலியை உருவாக்கினார். அது ASSI TOUT MOMÁSÚULL5. (SITARA - Software for Integrated Trafectory Analysis with Real Time Applications)

● இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழுவிவரங்களையும் மின்னியக்க முறையில் (Digital) சேகரிக்கும்.

 

சிறுவினா

1. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?

விடை:

●மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு மகத்தானது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணித்து அரசின் கவனத்துக்குத் தெரியப் படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசால் அதற்கேற்ற திட்டங்களை வகுத்து மக்களுக்கு பயன்படுத்த முடிகிறது.

●நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைச் செயற்கைக்கோள் மூ லம் கண்டுபிடித்ததை மக்களுக்கு பயனுள்ள வழியில் செய்ய முடிகிறது.

● கடல்பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்குச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது

● மக்கள் பயன்படுத்தும் இணையவழிச் சேவைகளுக்கு செயற்கைக்கோள் இவ்வாறாகப் பயன்படுகிறது.

 

நெடுவினா

1. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

விடை:

இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷ் பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்..டி யில் சேர்ந்து எம்.., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாகசந்திராயன்-1” ஏவப்பட்டது.

1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

கற்பவை கற்றபின்



1. பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்திகளைத் திரட்டி விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.

விடை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ ' சார்பில், பி.எஸ்.எல்.வி (PSLV)., மற்றும் ஜி.எஸ்.எல்.வி (GSLV)., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட் 6 ' செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், நேற்று மாலை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.

இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் 8' என்ற, ராக்கெட் மூலமாக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஆறாவது, 'கிரயோஜெனிக் இன்ஜின்' உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்ட, 'ஜிசாட் 6 ' செயற்கைக்கோள், ஏவப்பட்ட, 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது செலுத்தப்பட்ட ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில், 12வது ராக்கெட். 'ஜிசாட் 6 ' செயற்கைக்கோளின் ஆயுட்காலம் , 10 ஆண்டுகள். இதில், மொபைல் போன் தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த, 'எஸ் மற்றும் சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

ஜிசாட் 6 ' வெற்றிகரமாக ஏவப்பட்டது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏவப்பட்ட, 'ஜிசாட் 6' செயற்கைக்கோளுடன் , இதுவும் இணைந்து செயல்பட்டு, தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். தற்போது செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், இரண்டாம் நிலையில் செல்லும் போது, உந்து சக்தியை அதிகப்படுத்தவும், மின் காந்த அலைகளால் ராக்கெட்டை பாதுகாக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது. அந்த தொழில்நுட்பங்கள், வெற்றிகரமாக செயல்பட்டன.

இந்த ஆண்டில், 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். குறிப்பாக, ‘சந்திராயன் 2’ செயற்கைக்கோள் உட்பட, பூமி ஆய்வு, அறிவியல், நில அளவிடுதல், தகவல் தொடர்பு, மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கான சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


 

2. வகுப்புத் தோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் கற்பனையாக நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.

விடை:

கற்பனை நேர்காணல்  

வகுப்புத் தோழர் அருண்' என்பவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து 'மாலா' காணும் நேர்காணல்.

மாணவர்களே, நம் வகுப்புத் தோழன் அருண் தான் நம் முன் அமர்ந்திருக்கும் அறிவியல் அறிஞர். அவரை நம் சார்பில் "மாலா" வாகிய நான் காணும் இந்த நேர்காணலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

மாலா : வணக்கம்! திரு . அருண் அவர்களே.

அருண் : வணக்கம் ! மாலா மற்றும் உங்களுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்!

மாலா : ஐயா, அறிவியல் அறிஞராகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் இளமைக்காலம், கல்வி குறித்துக் கூறுங்களேன்.

அருண் : என் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூராகிய மேலூர். என் பெற்றோர் தினக் கூலியாகத்தான் வேலை செய்தார்கள். நான் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் தான் படித்தேன். பிறகு எனக்கு விருப்பமான பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து புரிந்து பயின்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

மாலா : சிறிய வயதில் உங்கள் எதிர்கால நோக்கம் என்னவாக இருந்தது ஐயா!

அருண் : பெரிதாக ஒன்றும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்பதே.

மாலா : உங்கள் பணியில் ஆரம்ப கால நிகழ்வுகள் பற்றிக் கூறுங்களேன்.

அருண் : பணிக்கு சேர்ந்த புதிதில் சற்று பயத்துடனேதான் ஒவ்வொரு பணியையும் செய்வேன். ஒரு பணி நிறைவு பெற்ற பின் என் மூத்த அறிவியல் அறிஞரிடம் பாராட்டு பெற்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கும்.

மாலா : அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அருண் : ஒரு செயற்கைகோள் ஏவுதளத்தில் எப்படிப்பட்ட மென்பொருள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஆய்வில் இரவு, பகலாக முயன்று ஒரு செயலியை உருவாக்கி அதனை பயன்படுத்தும் முறையும் உருவாக்கினேன். அப்போது அனைவரது பாராட்டையும் பெற்றதோடு பதவி உயர்வும் பெற்றேன். அது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாய் அமைந்தது.

மாலா : செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தால் நாட்டுக்கு ஏற்படும் பயன்கள் யாவை?

அருண் : ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி பற்றி கணித்துக் கூறுகிறோம். நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு என்பதை செயற்கைக்கோள் மூலம் அறிகிறோம். கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் உள்ளன என்பதை தெரிவிக்கிறோம். திறன்பேசி, தானியங்கி, பணஇயந்திரம் மற்றும் பிற இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் பயன்படுகின்றன.

மாலா : நீங்கள் மேன்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள் ஐயா! நன்றி! வணக்கம்!



கற்கண்டு

இயல் நான்கு

வல்லினம் மிகா இடங்கள்


பாடநூல் வினாக்கள்

 

சிறுவினா

1. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

விடை :

செடிகொடி என்பதற்கும் 

செடிக்கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு.

செடிகொடி என்னும் தொடருக்கு செடியும் கொடியும் என்பது பொருள்

செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள கொடி என்றே பொருள்.

செடி கொடி என்று எழுதும் போது செடி + உம் கொடி + உம் எனப் பிரித்து எழுதுவது 'உம்' என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும்.

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

. எழுத்துக்கள் - எழுத்துக்கள் - இவற்றில் எது சரி?

இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் விளக்குக்கள் இவற்றில் வரும் வல்லினம் மிகுமா?

விகுதிப் புணர்ச்சியில், கருத்து + கள் (விகுதி) வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.

. வல்லெழுத்து (க்,ச்,த்,ப்) ஏன் மிக வேண்டும் ?

பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

 


கற்பவை கற்றபின்


1. வல்லினம் வருமா?

விடை :

தோழி கூற்று - நிலைமொழி உயர்தினையாய் இருந்தால் வல்லினம் மிகா.

 பெரிய_தம்பி - குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

. சிறிய_பறவை  - குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

.. பழகு தமிழ் - வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

. இது கேள் - இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.

. எலி_கடிக்கும்எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.

. ஓடிய_ குதிரை பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

. தரும்படி_ சொன்னார் - “படிஎன முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

. வாழ்க_தலைவர் வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

. (கார்_காலம் - காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.

 

2. வல்லினம் இடலாமா?

விடை :

1. வாழ்த்து_கள்கள்' என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடக்கூடாது.

2. எழுத்து_கள் - "கள்" என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடுதல் கூடாது.

3. திருநிறை செல்வன்திருநிறை என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் வேண்டும்.

4.(திருவளர்_செல்வி - “வளர்செல்வி” - வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.

 

3. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.

விடை :

. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (தவறு)  -  “அண்ணாமலைஎன்னும் பெயரை அடுத்து வல்லினம் இடுதல் கூடாது.

அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது தான் (சரி)- இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுதுவது சரியே!

. அத்தனைச் சிறிய (தவறு)

அத்தனை சிறிய (சரி)       -அத்தனை' என்ற சொல்லின் பின் வல்லினம் இடுதல் கூடாது.

. ஆத்திச்சூடி (சரி) ஆத்தி - அகர ஈறு, இகர ஈறு புணரும்போது வல்லினம் மிகும்.

.எடுத்துக்காட்டுகள் (சரி) - வன்தொடர் குற்றியலுகரத்தில் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.

. கீழ்பக்கம் (தவறு)

கீழ்ப்பக்கம் (சரி)  -  இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

. சான்றோர் பேரவை (சரி) - நிலைமொழியில் உயர்திணை வரும்போது வல்லினம் இடுதல் கூடாது.

. சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்.

தயிர்ச்சோறு (சரி) -  இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்

 

4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும் , மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.

விடை :


வங்கிக்கடன் (வல்லினம் மிகும்) - இகர ஈற்றில் வல்லினம் மிகும் (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும் )

பழங்களைப்பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) -  '' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும்  தொடர் அதனால் வல்லினம் மிகும்.

திட்ட குழு (வல்லினம் மிகாது) - பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

. அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது) - ஆணை பிறப்பித்தது என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை எனவே. வல்லினம் மிகாது.

மருந்துக்கடை (வல்லினம் மிகும்)

1. மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும் வலிமிகும்.

2. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

குறிப்பு: மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில்

வந்தால் வல்லினம் மிகாது. இச்சொல்லில்

மருந்துபின் வல்லினம் மிகும்.

வேலையில்லாப் பட்டதாரி (வல்லினம் மிகும்) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

. சிறப்புப் பரிசு(வல்லினம் மிகும்) - வன்தொடர் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகும்.

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்