Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | என்தால்பி (H) மற்றும் அகஆற்றல் (U) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

வேதியியல் - என்தால்பி (H) மற்றும் அகஆற்றல் (U) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு | 11th Chemistry : UNIT 7 : Thermodynamics

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

என்தால்பி (H) மற்றும் அகஆற்றல் (U) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : என்தால்பி (H) மற்றும் அகஆற்றல் (U) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

என்தால்பி (H) மற்றும் அகஆற்றல் (U) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

ஒரு அமைப்பானது மாறாத அழுத்தத்தில், ஆரம்ப நிலையிலிருந்து (H1, U1, V1, மற்றும் P) இறுதிநிலைக்கு (H2, U2, V2 மற்றும் P) மாற்றத்திற்குட்படும் போது ஏற்படும் என்தால்பி மாற்றத்தை ΔH, பின்வருமாறு கணக்கிட முடியும்.

H = U + PV

ஆரம்ப நிலையில்

H1 = U1 + PV1 ---------- (7.10)

இறுதி நிலையில்

H2 = U2 + PV2 ---------- (7.11)

என்தால்பியில் ஏற்படும் மாற்றம் (7.11) - (7.10)

(H2 – H1) = (U2 – U1) + P (V2 – V1)

ΔH = ΔU + PΔV ---------- (7.12)

வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி

ΔU = q + w

சமன்பாடு 7.12 ல் பிரதியிட

ΔH = q + w + PΔV

w = - PΔV

ΔH =  qp - PΔV + PΔV

ΔH = qp --------- (7.13)

qp - என்பது மாறாத அழுத்த நிலையில் உறிஞ்சப்பட்ட வெப்பம், இது உள்ளுறை வெப்பம் அல்லது வெப்ப அடக்கம் எனப்படுகிறது.

மாறாத வெப்ப அழுத்த நிலைகளில் ஒன்றுடன் ஒன்று வேதிவினை புரிந்து வாயு நிலையுள்ள விளைபொருட்களை தரும் வாயுக்கள் அடங்கிய மூடிய அமைப்பு ஒன்றைக் கருதுக. வினைபடு வாயுக்களின் ஆரம்ப கனஅளவு Vi எனவும் வினைவிளை வாயுக்களின் கனஅளவு Vf, எனவும் அவற்றின் மோல் எண்ணிக்கை முறையே ni மற்றும் nf எனக் கொண்டால்

வினைபடு பொருட்களுக்கு (ஆரம்ப நிலை)

PVi = ni RT ---------- (7.14)

விளை பொருட்களுக்கு (இறுதி நிலை) :

PVf = nf RT ---------- (7.15)

(7.15) - (7.14)

P (Vf – Vi) = (nf – ni) RT

PΔV = Δn(g) RT ---------- (7.16)

சமன்பாடு 7.16 சமன்பாடு 7.12 ல் பிரதியிட

ΔΗ = ΔU + Δn(g) RT ---------- (7.17)

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்