Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இனப்பெருக்க புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - இனப்பெருக்க புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

இனப்பெருக்க புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்

இனப்பெருக்க புற அமைப்பியல்


மதிப்பீடு.

 

1. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.

அ) ஃபேபேஸி

ஆ) ஆஸ்ட்ரேஸி

இ) சொலானேசி

ஈ) பிராஸிக்கேசி

 

2. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்,

அ) இணையாச் சூலகஇலை சூலகம்

ஆ) பல சூலகஇலை சூலகம்

இ) இணைந்த சூலகஇலை சூலகம்

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை.

 

3. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது

அ) பல இணையாச் சூலகஇலை சூலகப்பை

ஆ) பல இணைந்த சூலகஇலை சூலகப்பை

இ) பல சூலகஇலை சூலகப்பை

ஈ) முழு மஞ்சரி

 

4. ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு

அ) அண்மையிலிருக்கும்

ஆ) சேய்மையிலிருக்கும்

இ) இடைச்செருகப்பட்டிருக்கும்

ஈ) எங்குமிருக்கும்

 

5. உண்மைக்கனி என்பது

அ) மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது

ஆ) மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது

இ) மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது

ஈ) மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது

 

6. பூவடிச்செதிலுடைய, பூக்காம்புச் செதிலற்ற இருபால்மலர், முழுமையான ஐந்தங்க மலர், தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்மட்டச் சூலகப்பை, கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.

7. கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக.

அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்

ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்

இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

8. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

9. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக.

10. தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.

 

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்