Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | 10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்


கற்றலின் நோக்கங்கள்

 வளங்கள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளல்

புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலா வளங்களைப் பற்றி புரிந்துகொள்ளல்

இந்தியாவில் உள்ள தொழிலகங்களின் வகைகள் மற்றும் பரவல்களை அடையாளம் காணுதல்

இந்திய தொழிலகங்களின் பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்தல்


அறிமுகம்

இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம் என்று அழைக்கப்படுகிறது. காற்றுநீர்மண்தாதுக்கள்புதைப்படிம எரிபொருள்தாவரங்கள்வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும். பல இயற்கை வளங்கள் மூலப்பொருள்களாக பயன்படுகின்றன. இயற்கை வளங்கள் எந்த ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றன. சூரிய சக்திகாற்று சக்திஉயிரின கழிவு வாயு வளிமம்ஓதசக்திஅலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும். பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். நிலக்கரிபெட்ரோலியம்இயற்கை வாயு போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.








10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்