Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பாடச் சுருக்கம்

சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை

பாடச் சுருக்கம்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை : பாடச் சுருக்கம்

பாடச் சுருக்கம்

ஒரு படத்தை இருசமபாகங்களாகப் பிரித்து ஓர் அரைப் பகுதி மற்றோர் அரைப் பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு பிரிக்கும் கோட்டினைச் சமச்சீர்க்கோடு அல்லது சமச்சீர் அச்சு என்கிறோம்.

ஒரு வடிவம் சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருந்தால் அது எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கும்.

ஒரு வடிவம் ஆனது மையத்தைப் பொறுத்து 360°இக்குக் குறைவாகச் சுழற்றும் பொழுது அதே நிலையை அடையுமானால் அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது எனலாம்

•  ஒரு முழுச்சுற்றில் ஒரு வடிவமானது எத்தனை முறை அந்த வடிவத்தின் மேல் சரியாகப் பொருந்துகிறதோ அந்த எண்ணிக்கையே அதன் சுழல் சமச்சீர் வரிசை ஆகும்.

ஓர் அமைப்பு புதிய இடத்திற்கு நகர்ந்து இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மையை உருவாக்குகிறது. சுழற்சியும் எதிரொளிப்பும் இன்றி இந்த இடப்பெயர்வு நடைபெறும்.


இணையச் செயல்பாடு

சமச்சீர்த் தன்மை

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி 1:

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் சமச்சீர்த் தன்மை என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். சமச்சீர் கோடு மற்றும் சுழல் சமச்சீர் எனும் இரு பணிதாள்கள் இடம் பெற்றிருக்கும். சமச்சீர் கோட்டில் இரு உருவங்களின் இடப்புறம் உள்ள புள்ளிகளை இழுத்து பின் முழு உருவத்தைக் காண 'reflect' ஐச் சொடுக்கவும்.

படி 2:

சுழல் சமச்சீரில் 'New shape' ஐச் சொடுக்கி சுழல் சமச்சீரின் வரிசையைக் காண்க. உங்கள் விடையை சரிபார்க்க அதனை பெட்டியில் தட்டச்சு செய்து 'உள்நுழை' (enter) பொத்தானை அழுத்தவும்.


செயல்பாட்டிற்கான உரலி:

சமச்சீர்த் தன்மை: https://ggbm.at/udcrmzyr அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை