Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் | முதல் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 4 : Direct and Inverse Proportion

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

ஒரு பொருளில் ஏற்படும் மாற்றம் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளிலும் ஏற்படுவதை மாறல் () மாறுபாடு என்கிறோம்

இரு அளவுகள் x, y நேர்விகிதத்தில் இருந்தால், ஒன்று அதிகரிக்கும்போது (குறையும்போது) மற்றொன்று அதிகரிக்கும் (குறையும்). மேலும் x/y என்பது ஒரு மாறிலியாக அமையும்

இரு அளவுகள் x, y எதிர் விகிதத்தில் இருந்தால், ஒன்று அதிகரிக்கும்போது (குறையும்போது) மற்றொன்று குறையும் (அதிகரிக்கும்). மேலும் அவற்றின் xy என்பது ஒரு மாறிலியாக அமையும்.


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி 1


கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - நேர்மாறு மற்றும் எதிர்மாறு விகிதங்கள்" என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். எதிர்மாறல் விகிதத்திற்காக ஒரு செயல்பாடு மற்றும் இரண்டு காணொலிகளும் உள்ளன. "எதிர்மாறல் விகிதம்என்ற செயல்பாட்டில், நழுவலை நகர்த்தி மகிழுந்தின், வேகத்தை மாற்றவும். தேவையான வேகத்தில் நகர்த்தத் தொடக்கக் குமிழ்மாட்டி (button)யை சொடுக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டபின், சென்று சேர ஆகும் நேரத்தை உற்று நோக்கவும்.

படி 2


இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கத்தில் நேர்மாறல் மற்றும் எதிர்மாறல் விகிதங்களுக்கான இரண்டு காணொலிகள் (videos) கொடுக்கப்பட்டுள்ளன. காணொலியைக் கண்ட பிறகு, நீங்கள் புத்தகத்திலிருந்து கற்றுக் கொண்டவற்றை ஒப்பிடவும்.


செயல்பாட்டிற்கான உரலி

நேர்மாறு மற்றும் எதிர்மாறு : https://ggbm.at/z7surxdx

 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க


7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள்