Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

துணைப்பாடம்: பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : துணைப்பாடம்: பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : விரிவானம் : பயணம்)


பாடநூல் மதிப்பீட்டு வினா

‘பயணம்' கதையைச் சுருக்கி எழுதுக. 

முன்னுரை

பிறருக்கு உதவி செய்து மகிழ்ந்த ஒருவரின் கதைதான் 'பயணம்'. இக்கதையைப் ‘பிரயாணம்' என்னும் நூலில் பாவண்ணன் படைத்துள்ளார். 

மிதிவண்டி ஆசை

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார். மிதிவண்டியில் செல்லுவது தான் அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும் மிதிவண்டிதான். கிருஷ்ணராஜ சாகர் அணை, மகாபலிபுரம் ஆகிய இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம். 

மிதிவண்டியில் பயணம்

ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. இரண்டு நாட்கள் மிதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை, குளிர் மாறி மாறி வந்தது. மழைத் தூரலில் அடுத்த ஊர் வரை சென்றார். பெரிய இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது. காற்றடிக்கும் கருவியும் இல்லை.நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை. 

குடிசை வீட்டுச் சிறுவன்

ஒரு குடிசை வீடு தெரிந்தது. அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து மிதிவண்டியில் வந்ததைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்பமுடியவில்லை. மனம் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லாம் என்றார். மிதிவண்டி ஆர்வத்தைச் சிறுவன் சொன்னான். அவனது மாமா வீட்டில் மிதிவண்டி உள்ளது, அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான். காலைப்பொழுது விடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ள சந்திரேகௌடா என்பவர் மிதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார். 

பயணம் தொடர்கின்றது..

அம்மாவின் அனுமதி பெற்று, அரிசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச்சொல்லி சிறுவன் கேட்டான். சிறுவனுடன் பயணம் தொடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார் 

முடிவுரை

ஆசைப்பட்டு வாங்கிய மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் 

மகிழச் செய்த அவரின் கருணை உள்ளம் பாராட்டுக்குரியது.

“கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லம்”



கற்பவை கற்றபின்


1. நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

நாங்கள் மிதிவண்டியில் அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. அம்மன் கோயில் ஒன்றின் அருகில் உணவு உண்டோம். கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவின்றி வாடிக்கிடந்ததைப் பார்த்தோம். உணவுப்பொட்டலம் ஒன்றினைக் கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, மகிழ்ந்து அவருடன் உரையாடினோம். பிறகு பறவைகள் சரணாலயம் வந்தோம். சிறு தானியங்களைப் பறவைகள் உண்ண தட்டில் வைத்தோம். பிறகு விளையாடி விட்டு மாலையில் மிதிவண்டியில் மீண்டும் வீடு திரும்பினோம். 


2. நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக.

வணக்கம், சென்னைக்குச் சுற்றுலா செல்ல முடிவு எடுத்தோம். உடைகள், உணவுகள், நொறுக்குத் தீனிகள், மருந்துகள், போர்வை, துண்டு, பற்பசை. சோப்பு ஆகியவற்றைப் பையில் எடுத்து வைத்தோம். முன்பதிவு செய்த பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டோம். அலைபேசி, மின்னேற்றி ஆகியவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்தோம்.



7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்