Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

கேட்க

மனித நேயத்தை வளர்க்கும் கதைகளைப் பெற்றோர்ஆசிரியரிடம் கேட்க.

 

பேசுக

1. உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார்நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்காரணம் கூறுக.

விடை

(i) என் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என் அம்மா.

(ii) அம்மாஅப்பாதாத்தாபாட்டிஅத்தைமாமாசித்தப்பாசித்திபெரியப்பாபெரியம்மா என என் உறவினர்கள் அனைவர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன்.

காரணம் :

நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்றேன்எனக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே என் வீட்டில்தாத்தாபாட்டிஅத்தைமாமாபெரியப்பாபெரியம்மாசித்தப்பா என அனைவரும் இருக்கின்றனர்என் நல்லது கெட்டது இவற்றில் எதுவானாலும் என்னோடு

சேர்ந்து மகிழவும் செய்வர் வருந்தவும் செய்வர்எனக்கு நேர்வதை அவர்களுக்கு நேர்ந்ததாக உணர்வர்.

எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன்என் தேவைகள் உடனே பூர்த்தியாகும்அதுமட்டுமின்றி என் வயதில் உள்ள மாமாஅத்தை பிள்ளைகள்பெரியப்பாசித்தப்பா பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகுவோம்அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

 

2. நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள்என்ன கொடுப்பீர்கள்எதற்காகக் கொடுப்பீர்கள்?

விடை

(i) என் நண்பனுக்குப் பரிசு கொடுப்பேன்.

(ii) புத்த கம்.

(iii) எனக்கும் என் நண்பனுக்கும் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும்மற்றப் பரிசுகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்ஆனால் புத்தகம் அறிவுப் பொருளாக இருக்கும்புத்தகத்தைப் படித்து அதனால் பெறுகின்ற அறிவை எக்காலத்திலும் மறக்கவியலாதுஎனவேபுத்தகத்தை மட்டுமே பரிசாகத் தருவேன்.

 

3. பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக.

பொதுநலம்

சமூகத்தொண்டு

விடை

பொதுநலம்:

சுயநலமற்ற நலமே பொதுநலம்சுயநலம் என்பது நம்முடன் பிறந்ததுஅதனை யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லைஅது நம் உணர்வோடு கூடியதாக இருக்கும்நமக்கு நம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகும் வழக்கம் இருந்தாலே பொதுநலம் வளரும்தன்னலமற்றவராய் வாழ்ந்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர்அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தங்கள் சுக துக்கங்களுக்கு இடம் கொடாமல் பிறர் நலனை மட்டுமே கருதி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகும்.

பொதுநலம் நாடுபவர்கள் சுயநலமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறவியலாதுஏனெனில் அவர்களிடம் பத்து சதவிகிதமாவாது சுயநலம் இருக்கும்வள்ளுவர்குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்” என்று கூறியுள்ளார்ஒருவருடைய குணத்தை ஆராயும் போது அவற்றுள் எக்குணம் மேலோங்கி இருக்கின்றதோ அதனை வைத்து அவர் மதிப்பிடப்படுவார்.

அதுபோல்தான் சுயநலமும்பொதுநலமும்சுயநலக்காரர்கள் நூறு சதவிகிதம் சுயநலத்துடன் இருப்பர்பொதுநலக்காரர்கள் பெரும்பான்மை பொதுநலமும்சிறுபான்மை சுயநலமும் உடையவர்களாக இருப்பர்நாணயத்திற்கு இருபக்கம் போன்றதது தான் இச்சுயநலமும் பொதுநலமும்.

தன்னம்பிக்கை எவரிடம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரிடம் பொதுநலம் அதிகமாகக் காணப்படும்சமுதாயத்திற்குச் செய்யப்படுகின்ற உதவியே பொதுநலம்பொதுநலம் என்பது பிறரைப் பார்த்து வருவதுபிறர் சொல்லித் தெரிவதுஉணர்வோடு தொடர்புடையதாக இருக்கும்மற்றவர்களுக்கு நாம் செய்கின்ற சேவைகள்உதவிகள் எல்லாமே பொதுநலமாகும்கண்தானம்இரத்ததானம்உறுப்புதானம் : என இவையெல்லாமே பொதுநலம்தான்மனிதநேயம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கே பொதுநலம் மலர்கிறது.

பொதுநலம் என்பது சுயநலமற்றதுசாதி மதம் பாராததுஏழை எளியவர் எனக் கருதாதுபிறருக்காக உழைப்பதுமற்றவர்களுக்கு உதவி செய்வதுபிறரை அரவணைப்பதுஏழைக் குழந்தைகளைக் கொஞ்சுதல் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது இவையெல்லாம் பொதுநலம்தான்பொதுநலம் உடையவரிடம் இருக்க வேண்டியது இனிமைஎளிமைபொறுமைபொதுமை ஆகிய பண்புகளாகும்இப்பண்புகளில் சிறந்தவர்கள் நோய்நொடிகளற்று நிம்மதியாக வாழ்வார்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர் பெருமான்அவரன்றோ பொதுநலத்தின் முன்னோடிகடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பதைப் போல் பொதுநலம் அமைய வேண்டும்பொது நலத்தில் நம் உலகத்திற்கே முன்னோடியாக வாழ்பவர்கள் விவசாயிகள்தான்உலகமே அவர்களின் உழைப்பில்தான் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.

அவசர சிகிச்சைக்கான ஊர்தி பொதுநலம் கருதியே இயங்குகிறதுபொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதால் சுயநலச் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாதுபொதுநலம் காப்பவர்கள் சூரியன்சந்திரன் போன்றும் காற்றும் மழையும் போன்று அனைவருக்கும் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும்.

 

சமூகத் தொண்டு :

பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம்சமுதாயம் என அழைக்கப்படுகிறதுஅந்த சமுதாயம் மேம்படவும்மக்களின் வாழ்வு மேம்படவும்பலரும் முயல்கின்றனர்குழு அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் தொண்டு செய்கின்றனர்அவ்வாறு மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி செயலாற்றுகிறார்கள்நாம் செய்யும் செயல்களை நம் கடமை என எண்ணிச் செயல்படவேண்டும்.

உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும்நடமாடும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச் செய்தால் அது கோயிலில் உள்ளவர்க்குச் செய்யும் தொண்டாகும்” என்பது திருமூலரின் கருத்துஇவ்வாறு மக்களினத்திற்குச் செய்யும் தொண்டே மகத்தானது.

தற்போது வளர்ந்து வரும்இணையச் செயல்பாடுகளால் சமூகத்தொண்டு செய்வது மிகவும் எளிதாகிவிட்டதுபுலனம் குழுமுகநூல் போன்றவற்றின் மூலம் பல சேவைகளைச் செய்யவியலும்தற்போதுள்ள தேவைகள் என்று சிந்தித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புநெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளைத் தவிர்த்தல்ஏரிகுளங்கள் தூர் வாருதல்காடுகள் அழிப்பதைத் தடுத்தல்விவசாய நிலங்களை விற்காமல் பார்த்துக் கொள்ளுதல்ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுதல் போன்றவையாகும்இளைஞர்கள் இவற்றைச் சரிசெய்வதற்கு அரசு உதவியோடும்பொதுமக்கள் துணையோடும் செயலாற்ற வேண்டும்.

கல்விசுகாதாரம்விவசாயம் இவையனைத்தும் மக்களின் அவசிய தேவைகள் ஆகும்இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்வழி இல்லாத ஊருக்கு வழி அமைத்தல்ஊரைத் தூய்மை செய்தல்தூய்மை பற்றி மக்களுக்கு எடுத்துத் கூறுதல்உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுதல்விழாக் காலங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்எப்பொழுதும் எவ்வுதவியும் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.

சமூகத் தொண்டினை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும்துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்திறந்த மனமும் அளவற்ற ஆற்றலும் உள்ளவர்களாய் எதையும் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும்உன்னத இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்து தொண்டாற்ற வேண்டும்நாட்டைப் பாதுகாப்போம்உயர்த்துவோம்.

 

படித்து உணர்க.

செல்வி பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்து இருந்தாள்அங்கு ஓடி வந்த முத்து, "செல்விஉன்னைத் தலைமை ஆசிரியர் அழைக்கிறார்என்று கூறியவாறே அவளுடைய சக்கர நாற்காலியைத் தலைமை ஆசிரியர் அறையை நோக்கித் தள்ளிக் கொண்டு போனான்தலைமை ஆசிரியர் செல்வியை ஆறாம் வகுப்பிற்கு அழைத்துச் சென்றார்.

வகுப்பறைக் கதவு மூடப்பட்டிருந்ததுகதவைத் திறந்ததும் மாணவர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்மெழுகுவர்த்திகள் ஒளி வீசினகாகிதத் தோரணங்களால் வகுப்பறை அலங்கரிக்கப்பட்டு இருந்ததுபலூன்கள் 'பட்பட்என வெடித்தனமாணவர்கள் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடினர்செல்வியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

 

சொல்லக் கேட்டு எழுதுக.

மனிதநேயம் கடுக்கன்

நோபல் பரிசு  கைலாஷ்சத்தியார்த்தி

ஹிதேந்திரன்  இயல்பு தவிற்சி

பசிப்பிணி  அன்னைதெரசா

தொழிலாளர்  உறுப்புக் கொடை

 

அகரவரிசைப்படுத்துக.

ஒழுக்கம்  உயிர்  ஆடு  எளிமை

அன்பு   இரக்கம்  ஓசை  ஐந்து

ஈதல்  ஊக்கம்  ஏது  ஒளவை

விடை

1. அன்பு

2. ஆடு

3. இரக்கம்

4. ஈதல்

5. உயிர்

6. ஊக்கம்

7. எளிமை

8. ஏது

9. ஐந்து

10. ஒழுக்கம்

11. ஓசை

12. ஔவை

 

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக.

அன்பு

நட்பு

உதவி

விடை

அன்பு :

கேட்டுப் பெறுவதல்ல அன்பு

கேட்காமலே பெறுதல் சிறப்பு

அன்பு பேச்சில் மட்டும்

போதுமாசெயலில் வேண்டாமா?

பகையைப் போக்கிடும் அன்பு

வெற்றியைத் தந்திடும் அன்பு

கண்களில் அன்பைக் காட்டு

கண்முன் கடவுளே நிற்பார்.

 

நட்பு :

காயத்திற்கு மருந்தாகும்

அழியாச் சுவடாகும்

தவற்றைச் சுட்டிக்காட்டும்

குறைகளைத் திருத்தும்

தனிமையை இனிமையாக்கும்

சோர்வில் உற்சாகமூட்டும்

நீயில்லையேல் நான்

மழைக் கானா நிலமாய்

வாடி வருந்துவேன்.

 

உதவி :

கல்லாதார்க்குக் கல்வியைக் கொடு

இல்லாதார்க்குப் பொருளைக் கொடு

கைகொடுக்கும் கையாய் இருந்திடு

கார்மேகத்தைப் போல் இருந்திடு

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காதே

உதவி செய்வதில் தயங்காதே

பிறர்க்கு விதைக்கும் விதையைத்தான் – நீ

அறுவடை செய்வாய் மறவாதே!

 

பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

அரசர் ஒருவர் தம் மக்களிடம் "அமைதி என்றால் என்ன?” என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர்அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார்அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்ததுஅது மிகவும் சிறப்பாக இருந்ததுபார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்ததுஇப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர்ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்ததுஅதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்ததுசற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.

"இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" என்று அரசர் கேட்டார்அந்த ஓவியர் வந்தார். "இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?" என்றார் அரசர்அதற்கு ஓவியர் "மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்றுஇவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும்எதற்கும் கலங்காமலும்தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதிஎன்றார்.

 

1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

விடை

அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது தேவையற்ற பேச்சைத் தவிர்த்துஅவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும்அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.

 

2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?

விடை

பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும்எதற்கும் கலங்காமலும்தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.

 

3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?

விடை

ஓர் அழகான பெரிய கோவில்அங்குள்ள கருவறைமண்டபம்தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சிஇக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.

 

4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

விடை

எங்கே அமைதி?

 

கடிதம் எழுதுக.

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

 

 

மொழியோடு விளையாடு

 

 

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.


இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.

விடை

1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.

2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.

3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.

 

கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்கனின் பெயர்களை எழுதுக.


.காகம்மல்

விடை

அணிகலன்களின் பெயர்கள் :

1. கம்மல்

2. கடுக்கன்

3. சூளாமணி

4. மோதிரம்

5. சிலம்பு

6. வளையல்

 


நிற்க அதற்குத் தக

 

 

என் பொறுப்புகள்

1. நான் எல்லாரிடமும் அன்பு காட்டுவேன்.

2. உறுப்புக்கொடையின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.

3. பிறருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்.

4. பிற உயிர்களைத் துன்புறுத்த மாட்டேன்.

5. எப்போதும் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன்.

 

கலைச்சொல் அறிவோம்.

1. மனிதநேயம் – Humanity

2. கருணை – Mercy

4. நோபல் பரிசு – Nobel Prize

3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation

5. சரக்குந்து – Lorry-

 


இணையத்தில் காண்க

உடல் உறுப்புக் கொடை குறித்த செய்திகளை இணையத்தில் தேடி அறிக.

 

இணையச் செயல்பாடுகள்

முதலுதவி


படிநிலைகள்:

• கொடுக்கப்பட்டஉரலியைப் பயன்படுத்திஇணையத்திலிருந்து 'First Aid' என்னும் செயலியைப் பதிவிறக்கிநிறுவிக்கொள்ளவும்.

• "First Aid" செயலியைத் திறந்ததும், "Fuergenry, Instructions, Chil' போன்ற தெரிவுகள் இருக்கும்

அதில் எமெர்ஜென்சி என்னும் தலைப்பின் கீழிருக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளில் BURNS என்பதைத் தேர்வு செய்யவும்.

• தற்போது தீக்காயங்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி அறிவுரைகள் பட்டியலிடப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும்.

• மீண்டும் முதல் பக்கத்திற்குச் சென்று 'Tastrows' என்பதைத் தேர்வு செய்துஅதில் CPR என்னும் முதலுதவி செய்வதற்கான படிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும்.


'முதலுதவிகாண்பதற்கான உரலி:

https://play.google.com/store/apps/details?id-org.indianredcross.firstaid&hl=en

கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே


 

கற்பவை கற்றபின் 



1. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.

ஆறு சக்கரம் நூறு வண்டி

அழகான ரயிலு வண்டி

மாடு கன்னு இல்லாமத்தான்

மாயமாத்தான் ஓடுது

உப்புப் பாரம் ஏத்தும் வண்டி

உப்பிலிப் பாளையம் போகும் வண்டி

விடை

இயல்பு நவிற்சி அணி.

 

2. நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க,

இயல்பு நவிற்சி : கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஓர் முக்கிய ஊராகும்இங்கு வங்காள விரிகுடாஅரபிக்கடல்இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றனஇது ஒரு சுற்றுலாத் தலம்இங்கு விவேகானந்தர்காமராசர்காந்தியடிகள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் உள்ளது. 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளதுஇங்கு மகாத்மா காந்தியின் சாம்பல்(அஸ்தி கரைக்கப்பட்டது.

உயர்வு நவிற்சி :

(i) கன்னியாகுமரி இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராகும்இங்கு மட்டும்தான் வங்காள விரிகுடா கடலும்அரபிக்கடலும்இந்திய பெருங்கடலும் சங்கமிக்கிறது.

(ii) இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

(iii) இங்கு உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்அந்தளவிற்கு அழகாக இருக்கிறதுவானை முட்டும் அளவிற்கு 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

(iv) இங்குதான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சாம்பல் (அஸ்தி கரைக்கப்பட்டதுகாந்தியடிகளுக்கும்காமராசருக்கும் புகழ்பெற்ற நினைவு மண்டபங்கள் உள்ளதுஇவை எல்லாம் கன்னியாகுமரியின் பெருமை ஆகும்.

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்