Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

கேட்க.

இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.

 

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

இயற்கையைப் பாதுகாப்போம்.

விடை

(i) வணக்கம்.

(ii) உயிர்கள் படைக்கப்பட்டபோதேஅவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடு அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

(iii) அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவுமனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.

(iv) மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுபிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர்நிலம்ஆகாயம்வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்து விட்டன. சீக்கிரமேவாழ முடியாத இடமாகப் பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது.

(v) உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள்நுண்ணுயிரிகள்ஆறுகள்ஏரிகள்கடற்பகுதிகள்மலைகள்மண்வளம்மேகங்கள்ஏன் ஒவ்வொரு மழைத்துளியும் கூட இயற்கையின் கொடைதான். இதில் ஒன்றை இழந்து கூட மனிதர்கள் வாழவே முடியாது.

(vi) உங்கள் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதைப்போலஇயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வையுங்கள்.

(vii) இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ம் நாள் உலக இயற்கை வளப்பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

(viii) இந்த நாளில்இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவேஅந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம்.

(ix) என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

 

சொல்லக்கேட்டு எழுதுக.

இயற்கையை விரும்புவது மட்டுமன்றிஅதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்றுபொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களைவரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

தமிழ் எண்கள் அறிவோம்.

விடுபட்ட கட்டங்களை நிரப்புக.


 

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2. 

2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16. கச

3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3. 

4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. 

5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் ரு

 

அறிந்து பயன்படுத்துவோம்.

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.

செய்தித் தொடர்

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.

(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத்தொடர்

ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்

(எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர்

ஏவல்வேண்டுதல்வாழ்த்துதல்வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.

(எ.கா.) இளமையில் கல். (ஏவல்)

உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்)

உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)

கல்லாமை ஒழிக.  (வைதல்}

உணர்ச்சித் தொடர்

உவகைஅழுகைஅவலம்அச்சம்வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.

(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!   (உவகை)

ஆ! புலி வருகிறது!  (அச்சம்)

பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)

ஆ! மலையின் உயரம்தான் என்னே!

 

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

செய்தித்தொடர்

2. கடமையைச் செய்.

விழைவுத்தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

உணர்ச்சித் தொடர்

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

வினாத்தொடர்

 

தொடர்களை மாற்றுக.

(வியப்பு)

எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)

விடை : என்னே காட்டின் அழகு!

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை : அதிகாலையில் துயில் எழு.

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)

விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

 

கடிதம் எழுதுக.

வினையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

30சாந்திநகர்,

திருப்பூர் – 2.

நாள்: 01.07.2020.

 

இனிய நண்பா ,

வணக்கம். நலம். நலம் அறிய ஆவலாய் உள்ளேன்.

இவ்வாண்டு உன் பள்ளியின் 50ஆம் ஆண்டு விளையாட்டு விழா 25.06.2020 அன்று நடைபெற்றதாய் மடல் எழுதியிருக்கின்றாய். இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் நீயும் கலந்து கொண்டதாகவும்முதலிடம் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாய். வெற்றி பெற்ற செய்தி அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

என் அன்பு நிறைந்த பாராட்டினை உனக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். உன்னை நண்பனாய் அடைந்தமையை எண்ணிப் பெருமைப்படுகின்றேன்.

படிப்பில் நீ காட்டி வருகின்ற ஆர்வமும்விடாமுயற்சியும்கடும் உழைப்பும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாய் வர உதவுகின்றன. அதேபோல் விளையாட்டிலும் வெற்றி பெற்றுள்ளமை நீ படிப்புவிளையாட்டு ஆகிய இரண்டிலும் கெட்டிக்காரன் என்பதைப் பறைசாற்றுகின்றன. மாநிலதேசியப் போட்டிகளிலும் தடகளத்தில் முத்திரை பதித்து பெருமை சேர்த்திடவும் வாழ்த்துகிறேன்.

உன் அன்பிற்குரிய நண்பன்,

மு. முத்து.

 

உறைமேல் முகவரி:

பெறுநர்

செல்வன். சா. மணிகண்டன்,

13, கோட்டை தெரு,

காந்தி நகர்,

மதுரை – 16.

 

மொழியோடு விளையாடு 

 

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.


 

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

1. நடக்கிறது – நட

2. போனான் – போ

3. சென்றனர் – செல்

4. உறங்கினாள் – உறங்கு

5. வாழிய – வாழ்

6. பேசினாள் – பேசு

7. வருக – வா

8. தருகின்றனர் – தா

9. பயின்றாள் – பயில்

10. கேட்டார் – கேள்

 

நிற்க அதற்குத் தக

 

என் பொறுப்புகள்

1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.

2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

 

கலைச்சொல் அறிவோம்.

1. பழங்குடியினர் – Tribes

2. சமவெளி – Plain

3. பள்ளத்தாக்கு – Valley

4. புதர் – Thicker

5. மலைமுகடு – Ridge

6. வெட்டுக்கிளி – Locust

7. சிறுத்தை – Leopard

8. மொட்டு – Bud

 

இணையத்தில் காண்க


பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை இணையத்தில் கண்டு அறிக.

விடை

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக) ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும்மொழியும்நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடிகொடிமரம்விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள்.

இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள்சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனிமனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும்சமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும்பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும்தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள்வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவட அமெரிக்காதென் அமெரிக்காஇந்தியாஜப்பான்பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். பல பழங்குடியின மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழ்கிறார்கள். மலேசியாபிலிப்பைன்ஸ்இந்தோனேசியாபோன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

 


கற்பவை கற்றபின்



''வாழ்கஎன்னும் சொல்லை ஐந்து பால்களிலும்மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.

(எ.கா.) அவன் வாழ்க. (ஆண்பால்)

நாம் வாழ்க. (தன்மை)

விடை

பால்கள்

அவள் வாழ்க (பெண்பால்)

அவர்கள் வாழ்க (பலர்பால்)

அது வாழ்க (ஒன்றன் பால்)

அவைகள் வாழ்க (பலவின்பால்)

இடங்கள்

நீ வாழ்க (முன்னிலை)

அவர்கள் வாழ்க (படர்க்கை)

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை