Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள்

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள் | 8th Science : Chapter 3 : Light

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள்

கோளக ஆடிகளால் தோன்றும் பிம்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள அவை தொடர்பான சில சொற்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள்

கோளக ஆடிகளால் தோன்றும் பிம்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள அவை தொடர்பான சில சொற்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வளைவு மையம்

ஒரு ஆடி எந்தக் கோளத்திலிருந்து உருவாக்கப்பட்டதோ, அந்தக் கோளத்தின் மையம் வளைவு மையம் எனப்படும். இது கதிர் வரைபடங்களில் c எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது (கோளக ஆடியினால் உருவாக்கப்படும் பிம்பங்களைக் கதிர் வரைபடங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றைப் பற்றி நீங்கள் மேல் வகுப்பில் பயில உள்ளீர்கள்).

ஆடி மையம்

இது கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆகும். இது P எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.

வளைவு ஆரம்

கோளத்தின் மையத்திற்கும் அதன் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு வளைவு ஆரம் எனப்படும். இது கதிர் வரைபடங்களில் R சனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. (முதன்மை அச்சானது ஆடியின் பரப்பில் ஆடியைச் சந்திக்கும் புள்ளி, முனை ஆகும். இது ஆடிமையம் எனவும் அழைக்கப்படுகிறது].

முதன்மை அச்சு

ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு முதன்மை அச்சு எனப்படும்.

குவியம்

ஒரு ஒளிக்கற்றையானது ஒரு கோளக ஆடியில் பட்டு எதிரொளித்தபின் முதன்மை அச்சின் ஒரு புள்ளியில் குவியும் (குழி ஆடி) அல்லது முதன்மை அச்சின் ஒரு புள்ளியிலிருந்து விரிந்து செல்வது போல் (குவி ஆடி) தோன்றும். அப்புள்ளியே, முதன்மைக் குவியம் அல்லது குவியம் என அழைக்கப்படுகிறது. இதனைக் குவியப்புள்ளி எனவும் அழைக்கலாம். இது கதிர் வரைபடத்தில் F என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

குவிய தொலைவு

ஆடி மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவிய தொலைவு (f) எனப்படும்.

கோளக ஆடியின் குவிய தொலைவிற்கும். வளைவு ஆரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. குவிய தொலைவானது வளைவு ஆரத்தில் பாதியாக இருக்கும்.

குவிய தொலைவு = வளைவு ஆரம் / 2


கணக்கீடு 1

கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவிய தொலைவினைக் காண்க.

தீர்வு

வளைவு ஆரம் = 20 செ.மீ.

குவிய தொலைவு (f) = வளைவு ஆரம் / 2

R/2 = 20/2 = 10  செமீ


கணக்கீடு 2

கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 7 செமீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

தீர்வு

குவிய தொலைவு = 7 செ.மீ.

வளைவு ஆரம் (R) = 2 × குவிய தொலைவு = 2 × 7 = 14 செ.மீ.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்