Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | எதிரொளிப்பின் வகைகள்

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - எதிரொளிப்பின் வகைகள் | 8th Science : Chapter 3 : Light

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

எதிரொளிப்பின் வகைகள்

எதிரொளிக்கும் பரப்பின் தன்மையைப் பொருத்து எதிரொளித்தலை இரண்டாக நாம் வகைப்படுத்தலாம். அவை ஒழுங்கான எதிரொளிப்பு மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு.

எதிரொளிப்பின் வகைகள்

அனைத்துப் பொருள்களும் ஒளியை எதிரொளிப்பதில்லை என்பதனை நாம் பயின்றுள்ளோம். ஒளி எதிரொளிக்கும் அளவானது எதிரொளிக்கும் பொருளின் பரப்பைச் சார்ந்தது. எதிரொளிக்கும் பரப்பின் தன்மையைப் பொருத்து எதிரொளித்தலை இரண்டாக நாம் வகைப்படுத்தலாம். அவை ஒழுங்கான எதிரொளிப்பு மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு.

 

1. ஒழுங்கான எதிரொளிப்பு

வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக் கற்றையானது (இணை ஒளிக்கதிர்களின் தொகுப்பு) விழும்போது அது எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும். இந்த எதிரொளிப்பில் ஒவ்வொரு கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்கும். எதிரொளித்தல் விதியானது பின்பற்றப்படுவதால் இதில் தெளிவான பிம்பம் கிடைக்கிறது. இவ்வகை எதிரொளிப்பு 'ஒழுங்கான எதிரொளிப்பு' அல்லது 'கண்ணாடி எதிரொளிப்பு எனப்படும். எ.கா: சமதள ஆடியில் உருவாகும் எதிரொளிப்பு மற்றும் நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு.


 

2. ஒழுங்கற்ற எதிரொளிப்பு

சொரசொரப்பான அல்லது ஒழுங்கற்ற பரப்பைக் கொண்ட பொருளில், அப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கும். ஒளியானது அத்தகைய பரப்பின்மீது படும்போது ஒவ்வொரு ஒளிக்கதிரும் வெவ்வேறு கோணத்தில் எதிரொளிக்கின்றன. இங்கு ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்காது. ஒளி எதிரொளிப்பு விதிகள் இதில் பின்பற்றப்படாததால் தெளிவான பிம்பம் கிடைப்பதில்லை. இத்தகைய எதிரொளிப்பு ஒழுங்கற்ற எதிராளிப்பு' அல்லது விரவலான எதிரொளிப்பு' எனப்படும். எடுத்துக்காட்டு: சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு.


8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்