Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள்

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள்

WHERE துணைநிலைக் கூற்று AND, OR, மற்றும் NOT செயற்குறிகளுடன் இணைந்து செயல்படும்.

SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள்

WHERE துணைநிலைக் கூற்று AND, OR, மற்றும் NOT செயற்குறிகளுடன் இணைந்து செயல்படும்.

AND மற்றும் OR செயற்குறிகள் பதிவுகளை ஒன்றிற்கு மேற்பட்ட நிபந்தனைகளைப் பொறுத்து வடிகட்ட பயன்படுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டு, student அட்டவணையில் இருந்து 'A' அல்லது B’ தரவகை பெற்ற மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் விவரங்களைக் காண்பிக்கிறது.

WHERE துணை நிலைக் கூற்று NOT செயற்குறியுடன் உள்ள எடுத்துக்காட்டு

எடுத்தக்காட்டு 15.5 -1

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT * FROM student where grade<>'A' and Grade<>'B''')

result = cursor.fetchall()

print(*result,sep="\n")

வெளியீடு

(3, 'BASKAR', 'C', 'M', 75.2, '1998-05-17')

(7, 'TARUN', 'D', 'M', 62.3, '1999-02-01')


WHERE துணை நிலைக்கூற்று AND செயற்குறியுடன் உள்ள எடுத்துக்காட்டு

பின்வரும் எடுத்துக்காட்டு, சராசரியாக 80 லிருந்து 90 விழுக்காடு (இரண்டு வரம்பையும் சேர்த்து) வாங்கிய மாணவர்களின் பெயர், பதிவு எண் , அவர்களின் சராசரி ஆகியவற்றைக் காண்பிக்கிறது.

எடுத்தக்காட்டு 15.5 -2

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor().

cursor.execute("SELECT Rollno,Sname,Average FROM student WHERE (Average>=80 AND Average<=90)").

result = cursor.fetchall()

print(*result,sep="\n")

வெளியீடு

(1, 'Akshay', 87.8)

(5, 'VARUN', 80.6)


WHERE துணை நிலைக்கூற்று OR செயற்குறியுடன் உள்ள எடுத்துக்காட்டு

பின்வரும் எடுத்துக்காட்டில் 2001ல் பிறந்த மாணவர்களின் பெயர் மற்றும் தரவரிசை காண்பிக்கப்பட்டுள்ளது.

எடுத்தக்காட்டு 15.5 -3

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT Rollno,sname FROM student WHERE (Average<60 OR Average>70)")

result = cursor.fetchall()

print(*result,sep="\n")

OUTPUT

(1, 'Akshay')

(2, 'Aravind')

(3, 'BASKAR')

(4, 'SAJINI')

(5, 'VARUN')

(6, 'PRIYA')

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்