தமிழ்நாடு – மானுடப் புவியியல் - வணிகம் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
வணிகம்
ஏற்றுமதி
மற்றும் இறக்குமதி ஆகியவை வணிகத்தின் இரு கூறுகளாகும். ஏற்றுமதி என்பது பொருள்கள்
மற்றும் சேவைகளை வெளிநாட்டுப் பணத்திற்கு விற்பதாகும் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின்
பங்களிப்பு 12.2 சதவிகிதம் ஆகும். இறக்குமதி
என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதாகும்.
தமிழ்நாடு பல பொருள்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்கிறது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு
இடையேயான வேறுபாடு ‘வர்த்தக சமநிலை' என அழைக்கப்படுகிறது.