Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ......... ஆகும்.

) பகை

). ஈகை

) வறுமை

) கொடுமை

[விடை : ). ஈகை]

 

2. பிற உயிர்களின் ........... க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

) மகிழ்வை

) செல்வத்தை

) துன்பத்தை

) பகையை

[விடை : ) துன்பத்தை]

 

3. உள்ளத்தில் .............. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

) மகிழ்ச்சி

) மன்னிப்பு

) துணிவு

) குற்றம்

[விடை : ) குற்றம்]

 

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்

குறியெதிர்ப்பை உடைத்து நீரது.

விடை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

 

எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்

மாணாசெய் தலை யாமை.

விடை

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

 

குறுவினா

1. அறிவின் பயன் யாது?

விடை

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன் ஆகும்.

 

2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

விடை

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

 

3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

விடை

இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

 

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விடை

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 

இணையச் செயல்பாடுகள்


படிகள்:

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தித் திருக்குறள் என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

செயலியின் முதல் பக்கத்தில் ஆரம்பிக்க, தொடர்க, வகைப்பாட்டியல் போன்ற தெரிவுகள் தோன்றும். இதன் வழியே விரும்பும் திருக்குறளை அறிக.

மேலும் குறள் விளையாட்டு என்பதைத் தெரிவு செய்து மாறி இருக்கும் சீர்களை வரிசைப்படுத்தித் திருக்குறனை விளையாட்டின் மூலம் அறிக.


செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/details?id=com.EL4.KuralGame&hl=en

கொடுக்கப்பட்டுள்ள படங்கள்அடையாளத்திற்காக மட்டுமே

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற