Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

வாழ்வியல்: திருக்குறள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

திருக்குறள்


68. வினை செயல்வகை

1. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது

2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 

செல்லும்வாய் நோக்கிச் செயல்

4. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் 

தீயெச்சம் போலத் தெறும்

5. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் 

இருள்தீர எண்ணிச் செயல்

6. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 

படுபயனும் பார்த்துச் செயல்

7. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 

உள்ளறிவான் உள்ளம் கொளல்

8. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 

யானையால் யானையாத் தற்று

9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்

10. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.


73. அவை அஞ்சாமை

1. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்

2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 

கற்ற செலச்சொல்லு வார்

3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 

அவையகத்து அஞ்சா தவர்

4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 

மிக்காருள் மிக்க கொளல்

5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 

மாற்றங் கொடுத்தற் பொருட்டு

6. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் 

நுண்ணவை அஞ்சு பவர்க்கு

7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து 

அஞ்சு மவன்கற்ற நூல்

8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் 

நன்கு செலச்சொல்லா தார்

9. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லார் அவைஅஞ்சு வார்

10. உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.


74. நாடு

1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு

2. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு

3. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறைஒருங்கு நேர்வது நாடு

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 

கொல்குறும்பும் இல்லது நாடு

6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா 

நாடென்ப நாட்டின் தலை

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

8. பிணியின்மை செல்வம விளைவுஇன்பம் ஏமம் 

அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து

9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு

10. ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்துஅமை வில்லாத நாடு.


75. அரண்

1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்

போற்று பவர்க்கும் பொருள்

2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்

3. உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

4. சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை 

ஊக்கம் அழிப்பது அரண்

5. கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் 

நிலைக்குஎளிதாம் நீரது அரண்

5. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் 

நல்லாள் உடையது அரண்

6. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் 

பற்றற் கரியது அரண்

7. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் 

பற்றியார் வெல்வது அரண்

8. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்டது அரண்

9. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.


98. பெருமை

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதுஇறந்து வாழ்தும் எனல்

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்

3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 

கீழல்லார் கீழல் லவர்

4. ஒருமை மகளிரே போலப் பெருமையும் 

தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு

5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

அருமை உடைய செயல்

6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான்

சீரல் லவர்கண் படின்

8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 

அணியுமாம் தன்னை வியந்து

9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்

10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 50 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்காக அல்ல.

திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் 

நாள் தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.

வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம்

இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்

திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.

திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஓவியப் போட்டியை நடத்தலாம்

குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்

சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்