நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வைரஸ் | 8th Science : Chapter 16 : Microorganisms

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்

வைரஸ்

வைரஸ் என்பது மரபுப் பொருள் மற்றும் புரதத்தால் ஆன மிகச் சிறிய துகளாகும். இவை உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு இடைப்பட்டவை. இலத்தீன் மொழியில் வைரஸ் என்பது 'விஷம்' எனப் பொருள்படும்.

வைரஸ்

வைரஸ் என்பது மரபுப் பொருள் மற்றும் புரதத்தால் ஆன மிகச் சிறிய துகளாகும். இவை உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு இடைப்பட்டவை. இலத்தீன் மொழியில் வைரஸ் என்பது 'விஷம்' எனப் பொருள்படும். வைரஸ்கள் செல்லுக்கள்ளை வாழும் கட்டாய ஒட்டுண்ணிகளாகும். வைரஸைப் பற்றிய பாடப் பிரிவு 'வைராலஜி' எனப்படும். வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் 10,000 மடங்கு சிறியவை. வைரஸ்கள் வேறுபட்ட வடிவமுடையவை. அவை, கோல் வடிவம், கோள வடிவம் அல்லது பிற வடிவங்கள்.

 

1. வைரஸின் அமைப்பு

வைரஸானது அதன் மையப் பகுதியில் டி. என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வைக் கொண்டுள்ளது. அதனைச் சுற்றி புரத உறை காணப்படுகிறது. சிலவகை வைரஸ்களில் அப்புரத உறையைச் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஆகியவற்றாலான வேறொரு உறை காணப்படுகிறது. இவ்வுறையில் கூர்முனை (Spike) போன்ற அமைப்புகள் உள்ளன. இவை வைரஸ் துகள்கள் ஓம்புயிரி செல்களில் ஒட்டிக் கொள்ள உதவுகின்றன. வைரஸ்கள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களில் பலவிதமான நோய்களை உண்டாக்குகின்றன.


2. வைரஸின் பண்புகள்

வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.


உயிருள்ள பண்புகள்

• வெப்பம், வேதிப் பொருள் மற்றும் கதிரியக்கம் ஆகியவற்றிற்கு இவை பதில்வினை புரிகின்றன.


• ஓம்புயிரியின் செல்களினுள்ளே பெருக்கமடைந்து, தங்களுடைய சந்ததிகளை உருவாக்கிக் கொள்கின்றன.

உயிரற்ற பண்புகள்

• .தன்னிச்சையான சூழலில் இவை செயலற்ற நிலையில் காணப்படுகின்றன.

• இவற்றைப் படிகமாக்கி பிற உயிரற்ற பொருள்களைப் போல நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்