சூத்திரம் | அளவியல் | கணக்கு - ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் கன அளவு | 10th Mathematics : UNIT 7 : Mensuration
கன அளவு (Volume)
இதுவரை உருளை, கூம்பு, கோளம், அரைக்கோளம் மற்றும் இடைக்கண்டம் ஆகியவற்றின் புறப்பரப்புகள் பற்றி விவாதித்தோம். இனி அந்தத் திண்மங்களின் கன அளவுகள் பற்றி காண்போம்.
ஒரு பொருள் ஆக்கிரமித்துள்ள வெளியின் அளவே அதன் கன அளவு எனப்படும். கன அளவைக் ‘கன அலகுகள்’ எனும் அலகில் கணக்கிடுவோம்.
ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் கன அளவு (Volume of a solid Right Circular Cylinder)
'r' அலகுகள் ஆரமும், 'h' அலகுகள் உயரமும் கொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் கன அளவு
V = (அடிப்பரப்பு) × (உயரம்) = πr2 × h = πr2h க.அ
எனவே, உருளையின் கன அளவு = πr2h க.அ
